பா(சி)சக் கிளி

Posted by அகத்தீ Labels:

 

அங்கே பார் மந்திரக் கிளி உட்கார்ந்திருக்கிறது.
அதன் இதயத்தை நோக்கி
அம்பை எய்துக!
இலக்கு சரிதான். ஆயின்
மரக்கிளையில் கறையான் பார்!
இலைகளை முழுக்க புழுக்கள்
அரித்திருப்பதைப் பார்!
மரத்தினடியில் எறம்புப் புற்று
பரந்திருப்பதைப் பார் !
வில்லில் பழைய இரத்தக்கறை
கழுவவே இல்லையா ?
குறி பார்க்குமுன் கண்ணாடியை கழற்றி எறிய மறக்காதே !
அம்பில் கொஞ்சம் வெண்ணை
தடவிக் கொள்ளத் தவறாதே !
வில்லுக்கு மசகு எண்ணை
பூசாமல் தொடவே கூடாது..
ஜோதிடனைக் கேள் ! நேரம் குறி!
இப்போது நல்ல நேரமில்லை!
அம்பை ஏந்த உனக்கு
அருகதை இருக்கிறதா யோசி !
பா(சி)சக் கிளி பகவான் அனுப்பியது
கன்னத்தில் போட்டுக்கோ..
( புனித பரட்சியாளர்கள் அள்ளிக்கொட்டும் அறிவுரைகளை பார்க்கும் போது தோன்றிய காட்சி இது...)
சுபொஅ.
All reactions:
You, Chinthan Ep, Munirathinam Va and 4 others

0 comments :

Post a Comment