நிறங்களின் பின்னால்…
எழுபதுகளில்
எண்பதுகளில் நிறங்களைப் பற்றிய பிம்பம் வேறுமாதிரியாக கட்டமைக்கப்பட்டிருந்தது .
எங்க அப்பா
எப்போதும் எங்களுக்கு பச்சை வண்ண சட்டை ,டவுசர் , எங்க அக்காவுக்கு பாவாடை எல்லாம்
வாங்குவார் . அவருக்கு வெள்ளை ஜிப்பா ,பச்சை கரை வேட்டி ,அம்மாவுக்கு பச்சை நிற புடவை
,பச்சை இல்லாமல் அவர் வாங்கும் உடை அமையாது . அவர் தனக்கு பச்சை வண்ணம் ராசி என்பார்
.எம் நண்பர்கள் இந்த பச்சையைக் காட்டியே கேலி செய்வார்கள் .
சிவப்பு
,கறுப்பு ,கருநீலம் போன்ற அடர் வண்ணங்கள் கண்ணை உறுத்தும் நிறங்களாகப் பார்க்கப்பட்டன.
ஆனால் ,அடித்தட்டு மக்கள் உழைக்கும் மக்கள் கொண்டாடிய நிறங்களாக இருந்தன.
என்னடா உன் டேஸ்ட்டு கிராமத்தான் மாதிரி என கேலி செய்வார்கள்
.
இண்டர்வியூ
, பெரிய சந்திப்புகளுக்கு அடர்நிறங்கள் ஏற்றதாக கருதப்படவில்லை . மென்னிற உடைகள் அதற்கென
இருக்கும் .
சந்தணம் நிறம்
,வெள்ளை ,மேக வண்ணம் என கண்ணை உறுத்தாத வண்ணங்களே உபதேசிக்கப்பட்டது .
பெரும்பாலும்
இவை நகரம் சார்ந்த , நடுத்தரவர்க்கம் ,மேட்டுக்குடி சார்ந்த நிறங்களாகக் கொண்டாடப்பட்டன
.
காணும் பொங்கலன்று
சென்னையில் பொருட்காட்சி ,மெரினா கடற்கரை எங்கும் கூட்டம் பிதுக்கித் தள்ளும் அப்போது
அங்கு உழைக்கும் மக்களும் அடித்தட்டு மக்களுமே மொய்த்துகிடப்பர் . அதை கேமிராவில் கிளிக்கினால்
அடர் வண்ணங்களின் சங்கமமாக இருக்கும் .
இதையே சுட்டி
அடர் நிறங்களை கேலி செய்வதும் உண்டு .
ஆயின் பெண்களின்
உடைத் தேர்வில் இந்த நிறச் சேர்மானம் வேறுமாதிரி செயலாற்றும் .அங்கு சிவப்பு ,நீலம்
, பச்சை ,மஞ்சள் ஓங்கி நிற்கும் .கறுப்பும் ,வெள்ளையும் பெண்களுக்கு உகந்த நிறமல்ல
என ஒதுக்கப்படும் . துக்கம் ,விதவை இவற்றின் குறியீடாக்கப்படும்.
பள்ளிகளில்
வெள்ளைத் தாவணியை மாணவிகளுக்கு சீருடை ஆக்கிய போது கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தன
.
அன்றைக்கு
நீ விரும்பும் நிறத்தைக் கொண்டு உன் குணநலம் ,இயல்பை கணித்துச் சொல்லும் சோதிடர் ,உளவியல்
நிபுணர் எல்ல்லாம் உண்டு . இன்றைக்கு அந்த கணிப்புகள் தலைகீழாகிவிட்டன.
கணினி யுகத்தில்
கறுப்பு ,சிவப்பு ,நீலம் எல்லாம் பளிச்பளிச்சென மின்ன அலுவலகங்கள் ,உயர் மட்டங்கள்
. அடர் வண்ணங்கள் எங்கும் வந்துவிட்டன . போட்டோ ஷூட்டுக்கு இவை தேவைப்படுகிறதோ ? செல்பி
மோகத்திற்கும் இந்த நிற மாற்றதிற்கும் தொடர்பு இருக்குமோ ?
வண்ணங்களின்
பார்வை .இன்றைக்கு மாறிவிட்டன .
அடர் வண்ணங்கள் இன்றைக்கு எங்கும் கோலோச்சுகின்றன
.
வண்ணங்களின்
சமூக உளவியல் மாறிவிட்டது .
நவீன தொழில்
நுட்பம் எண்ண முடியா வண்ணக்கலவைகளைப் பெற்றுப் போட்டுக்கொண்டே இருக்கின்றது .
சிவப்பும் ,கறுப்பும் ,நீலமும் இன்று
மரியாதைக் குரியதாகிவிட்டன .
இனி இவைதான்
மானுடத்தை ஆளும் .
வீட்டுச்
சுவற்றில் வெள்ளையடித்த காலம் போய் ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு வண்ணத்தில் பளிச்சிடுகின்றன
.
காவி புனிதமானதாக
துறவின் குறியீடாக அன்றைக்கு இருந்தது .இன்றைக்கோ கலவர நிறமாக வெறுக்கத்தக்க நிறமாக
– மனித விரோத சிந்தனையின் நிறமாக அரசியல் நிறமாகிவிட்டது . வெறுப்பு அரசியலின் குறியீடாக்கப்படவில்லை
எனில் காவி மீதும் நமக்கு கசப்பு இல்லை .பச்சை காவி நிறங்கள் எதிர் எதிராக நிறுத்தப்படுவதிலும்
உடன்பாடில்லை .
சிவப்பு
,மஞ்சள் , நீலம் தான் அடிப்படை வண்ணமென்றும் ஏனையவை எல்லாம் இவற்றின் கூட்டணிதாம் என்றும்
இன்றைய புரிதல் மேம்பட்டிருக்கிறது . வானவில்கூட .
ஆம்.
சிவப்பும் ,கறுப்பும் ,நீலமும் இன்று மரியாதைக் குரியதாகிவிட்டன . இனி இவைதான் மானுடத்தை
ஆளும் . பச்சை ,மஞ்சள் உள்ளிட்ட எண்ணற்ற வண்ணக் கலவைகளும் எங்கும் கொண்டாடப்படும்
.
சுபொஅ.
13/06/2023.
0 comments :
Post a Comment