சூழும் வலி
பேரழிவு துரத்திக்கொண்டிருக்கிறது
நெருப்பு வளையம் சூழந்திருக்கிறது
எல்லா பக்கமும் கொலைவெறியோடு
காத்திருக்கிறது கொடும் பூதங்கள்
நிராயுதபாணியாய் சிக்கிய கூட்டம்
தப்பிக்க வழிதேடி தவிக்கிறது
புகைமூட்டம் கண் தெரியவில்லை
எந்தப்பக்கம் ஓடுவது இலக்குமில்லை
நெருக்கடி நேர சட்டாம் பிள்ளைகள்
ஆளுக்கொரு திசையில் இழுக்க
அழுகையும் பற்கடிப்புமாய் பொழுதுநகர
அவதார புருஷனின் வருகைக்காய்
காத்திருந்து காத்திருந்து காத்திருந்து
சூழந்த நெருப்பு ஒவ்வொருவராய் விழுங்க
எரிந்து சாவதா ? எழுந்து வெல்வதா ?
விதி உங்கள் கையில் ...
சு.பொ.அகத்தியலிங்கம் .
0 comments :
Post a Comment