தெய்வம் மரணம்
சு.பொ.அகத்தியலிங்கம்.
தெய்வம் இறந்த செய்தி
பரவிய கணம் தொட்டு
புதிது புதிதாய் கேள்விகள்
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
.
சதி செய்து கொன்றதாய்
ஒரு செய்தி தீயாய் பரவுகிறது
இயற்கைச் சாவென
சாதிக்க அறிக்கை மேல் அறிக்கை
விசாரணைக்குழு அமைத்தாலாவது
மெய் விளங்குமென
ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்
தற்கொலை செய்து கொண்டதாய்
அறிவித்துவிடுலாமா என
தீவிரமாய் யோசிப்பதாகவும்
தகவல்
இதற்கிடையில்
தெய்வமே குற்றவாளி என
நியாயத்தீர்ப்பு உறுதிசெய்தது
அது முதல்
அனைத்து குற்றவாளிகளும்
தெயவங்களென அழைக்கப்படலாயின
!
அரசர்
தெய்வம்
குற்றவாளி
யாருக்கு முதல் மரியாதை
இப்போதைய குழப்பம் இதுதான்
குழப்பம்
சிற்றரசுக்கு மட்டுமல்ல
பேரரசுக்கும்தான் .
காட்டை அழித்தாலும்
நாட்டை அழித்தாலும்
இம்மூவர் கூட்டை
உடைக்க முடியாதாம் !
கொடுமை கொடுமையின்னு
கோயிலுக்கு போனால்
அங்கேயும்
அரசரும்
குற்றவாளியும்
தெய்வமும்
ஒரே ஆட்டமாம் !
சிறை
கோயில்
ஆட்சி
வழிபாடு
வார்த்தைகளில்
என்ன இருக்கிறது?
சர்வம் அதி ‘காரம்’
பணம் பலம் பதவி
இவை எதுவும் புரியவில்லையா
?
நீ பக்தனே !
ஐயமில்லை !!
0 comments :
Post a Comment