படுகொலைக்கு பின்னாலுள்ள அரசியல் சதி - சு.பொ.அகத்தியலிங்கம்

Posted by அகத்தீ Labels:தி இந்து தமிழ் நாளிதழில் முனைவர் இரா, திருநாவுக்கரசு எழுதிய “ மிருகங்களின் கலாச்சார மொழி” எனும் கட்டுரையில் அவர் சொல்லத்தவறியது எது ? : ஒரு தொடர் வினையாய் எமது பதில்படுகொலைக்கு பின்னாலுள்ள அரசியல் சதி
 

- சு.பொ.அகத்தியலிங்கம்


தபோல்கர் ,பன்சாரே , கல்புர்கி படுகொலை குறித்து கிஞ்சித்தும் வருந்தாத - கண்டிக்காத பிரதமர் மோடி இந்து -பவுத்த கருத்தரங்கில் உரையாடல் மூலமே தீர்வு காண வேண்டும்; வன்முறையால் அல்ல என நீட்டி முழக்குகிறார். அதற்கு ஆதி சங்கரரை உதாரணம் காட்டுகிறார். அந்த ஆதி சங்கரர் வாதத்தின் மூலமா பவுத்தத்தை வென்றார், இல்லவே இல்லை.
முனைவர் இரா. திருநாவுக்கரசு திஇந்து தமிழ் நாளிதழில் (செப்.4) எழுதியுள்ள கட்டுரைமிருகங்களின் கலாச்சாரமொழிஎன்றகட்டுரை கன்னட சிந்தனையாளர் கல்புர்க்கி படுகொலைப் பின்னணியில் வெளிவந்துள்ளது . கருத்து சுதந்திரம்அரிக்கப்படுவது குறித்த ஆழ்ந்த கவலையை, ஆபத்தை நுட்பமாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் .ஏன் ஐம்பது ஆண்டு காலத்தில் நம் உயரிய சகிப்பத்தன்மை யும் திறந்த விவாதமும் பின்னுக்குத் தள்ளப் பட்டு வெறுப்பு விதைக்கப்படுகிறது என்பதை பொறுப்புணர்வோடு அலச முயன்றுள்ளார் .
தங்களது அன்றாட அரசியல் தேவைகளுக்காக வரலாற்றை இழுத்தும், திரித் தும், முறித்தும் எழுதத் தொடங்கியதன் பலனை இன்று சந்திக்க வேண்டியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இன்று வாழ்க்கைத்தரம் நிச்சயம் மேம்பட்டுத்தான் இருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்தில் உயர்கல்வி இன்று பலருக்கும் எட்டும் தொலைவில் இருக்கிறது.அமெ ரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்பு களுக்காகவும் செல்வது கடினம் அல்ல. உலக மயமாதலின் பகட்டான சில அம்சங் களின் முழுப்பலனையும் அனுபவித்து வரும் நமது நடுத்தட்டு வர்க்கம், தங்களது கலாச்சார வேர்கள் பற்றி எதற்காக இப்படி ஒரு பதற்றத்தில் இருக்கிறது என்ற கேள்விஎழுவது நியாயமே. ஆம், தங்களது பண்பாடு, கலாச்சாரக் குறியீடுகள் குறித்து முன்எப்போதும் இல்லாத அளவுக்கு நிதான மில்லாமல் இன்று ஒரு தரப்பினர் செயல் படுவதன் பின்புலம் என்ன? தங்களது கலாச்சார வரலாறு மீது எவ்விதமான ஆய்வுநோக்கையும் முற்றாக நிராகரிகக் கூடிய நிலை உருவானது எதனால்? ஒரு புறம், உலகம் முழுவதும் சென்று பொருளீட்ட வேண்டும் என்ற முனைப்பு; மறுபுறம் தங்க ளது பண்பாடு குறித்த தெளிவின்மை அல்லது முதிர்ச்சியற்ற புரிதல். இது எளிய குழப்பம் அல்ல.தாராளமயப் பொருளாதாரமும் உலக மயமாதலும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஏற்படுத்தும் சமூக, கலாச்சாரச்சமச் சீரின்மை. கடந்த 30 ஆண்டுகளாக தாராள வாதப் பொருளாதாரம் உருவாக்கி விட்ட கலாச்சார நிர்ப்பந்தம் காரணமாக புதிய புதிய கலாச்சார எதிரிகளை இன்றைய ஆதிக்க சக்திகள் அறிவித்தபடியே இருக்கின்றன. இது பொருளாதாரம், கலாச் சாரம் என இரு தளங்களிலும் நாம் எதிர் கொண்டாக வேண்டிய சவால்!”

கட்டுரையாளர் இப்படி கடைசியாக முத்தாய்ப்பாகக் கூறி முடித்திருக்கிறார் .உலக மயமும் மதவாதமும் ஒன்றுக் கொன்று எப்படி வினை புரிகிறது என்பதற் கான விளக்கம் இல்லை .இதன் அரசியல் குறித்தும் சரியான பதிவு இல்லை. எனவே அக்கட்டுரையின் தொடர்ச்சியாக சில விளக்கங்களை அளிப்பது தவறல்ல .

முதலாவதாக உலகமயம் உருவாக்கும் கலாச்சார வெற்றிடம் குறித்து புரிதல் தேவை. உலகமயம் மனிதனை வெறும் நுகர்வு இயந்திரமாகக் குறுக்கப் பார்க்கி றது. அவனின் / அவளின் உடை, உணவு, இசை அனைத்தையும் அவனிடம்பிராண்ட நேம்முடன் திணிக்கிறது . ஊடகங்கள் அந்தத் திருப்பணியைத் தான்24 மணி நேரமும் செய்கின்றன. அவன்தன் சொந்த பண்பாட்டின் வேர் அறுந்தவனாகிறான். மனித மதிப்புகளை தொலைத்து வெறும் பணம் பணம் என வெறி கொண்டலைகிற நுகர்வோ ராக்குகிறது. இங்கே மனதின் அடியாளத் தில் ஏற்படும் கலாச்சார வெறுமையும் வெற்றிடமும் அவனை /அவளை பின்னோக்கி திருப்புகிறது. அங்கே அதே உலக மயம்அவன் விழிப்புறாமல் இருக்கஆன்மீகம்என்ற நளின வார்த்தைகளில் மத போதைஊட்டுகிறது. அதற்காகவே கார்ப்பரேட் சாமியார்கள் ஓவர் டைம் வேலை செய்து கொண் டிருக்கிறார்கள் .இது மிகமுக்கியமானது .உலக மயத்தின் - தாராளமயத்தின் - தனியார்மயத்தில் பொருளாதார விளைவுகள் ஒருபுறம் அவன் /அவள்வாழ்வைச் சூறையாடுகிறது எனில் சமூக உளவியல் குரூரமாய் சிதைக்கப்படுகிறது .இடதுசாரி கள் மற்றும் முற்போக்காளர்கள் மிகுந்தகவலை கொள்ளத்தக்க இடம் இதுவா கிறது. இந்த நவீன பொருளாதாரக் கொள் கைகளால் நிலை உயர்ந்த ஒரு உயர் மத் திய தரவர்க்கம் சமூக பிரஞ்ஞையற்று இன்னும் தங்களுக்கு மட்டும் அதிக சுகபோகமும் வசதிகளும் வேண்டுமென கூச்சலிடுகின்றனர். அவர்களுக்கு சமூக நீதி கசக் கிறது. சமூக சீர்திருத்தம் குமட்டுகிறது. இவர்கள் தொழில் நுட்பத்தில் ஓங்கி நிற்பதால் சமூக வலை தளம் அவர்களின் கருத்துப் பிரச்சார மேடையாகிறது.கார்ப்பரேட் ஊடகங்களும் அவர்களுக்கே தீனி போடுகிறது. அங்கே வக்கிரமும் ஓர வஞ்சகமும் அரங்கேறுகின்றன. இந்தப் பொருளாதாரப் போரில் வாழ்வைத் தொலைத்த 85 விழுக்காட்டு மக்களின் குரல் அங்கே கிட்டத்தட்ட இல்லை; அல்லது மிகச் சன்னமாக ஒலிக்கிறது. ஆக இந்த பொருளாதார அம்சத்தை லேசாக கோடிட்டிருக்கிறார் இரா. திருநாவுக்கரசு. ஆனால் அதன் அரசியல் கருவியை அவர் சுட்டத் தவறிவிட்டார்.

விடுதலைப் போரில் பொது எதிரியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நோக்கி சுட்டு விரலை நீட்ட முடிந்தது; அதனைஎதிர்த்து மக்களைத் திரட்ட முடிந்தது. இன்று மக்களின் பொது எதிரி யார்? இந்தப் பொருளாதாரக் கொள்கைகள் தாம்ஆனால் அதற்கு எதிராக மக்கள் ஒன்று திரள விடாமல் தடுக்க அவர்களுக்கு ஒருஅரசியல் மேடை தேவை; அதற்கு இந்துத்துவ மதவெறி அவர்களுக்கு பயன்படுகிறது . இருவரும் நெருங்கி ஒத்துழைக் கின்றனர். அதானி , அம்பானியின்பிஸினெஸ்அம்பாசிடராகவேமாறி மோடி நாடு நாடாய் பறக்கிறார். பழமைவாத- சனாதன - பிராமணிய ஆதிக்கம் கொண்டஒரு ராஜியத்தை திட்டமாகக் கொண்டுசெயல்படும் ஆர்எஸ்எஸ்சங் பரிவார்அமைப்பு இச்சூழலில் இந்த பெருமுதலாளித்துவ கூட்டத்தோடு கைகோர்த்துஇருவர் கனவையும் ஒரு சேர அரங்கேற்றத் துடிக்கிறது .

தபோல்கர் ,பன்சாரே , கல்புர்கி படு கொலை குறித்து கிஞ்சித்தும் வருந்தாத - கண்டிக்காத பிரதமர் மோடி இந்து -பவுத்த கருத்தரங்கில் உரையாடல் மூலமே தீர்வுகாண வேண்டும்; வன்முறையால் அல்ல என நீட்டி முழக்குகிறார். அதற்கு ஆதி சங்கரரை உதாரணம் காட்டுகிறார். அந்த ஆதி சங்கரர் வாதத்தின் மூலமா பவுத்தத்தை வென்றார், இல்லவே இல்லை. ஆட்சி அதிகார உதவியுடன் பவுத்த நூல்களை எரித்தும், பவுத்த விஹார்களை அழித்தும் அல்லவா செய்தார் . விவேகானந்தரே இதனை பலஇடங்களில் சொல்லியுள்ளாரே! அம்பேத்கர் விவரித்துள்ளாரே! வரலாற்று ஆய்வா ளர்கள் ஆராய்ந்து புலப்படுத்தியுள்ளாரே! அதன் பிறகும் மோடியால் புளுகு மூட் டையை அவிழக்க முடிகிறதெனில் அவர் கள் அரசியல் வியூகம் அதுவே !

ஆர்எஸ்எஸ் முன்பு பாஜக அமைச்சர வையே -மோடி அமைச்சரவையே பணிந்து நிற்கிற காட்சி நவீன பாசிசப் போக்கை காட்டுகிறதே. இதைக் கேள்வி கேட்க யாரும்துணியக் கூடாதென்றுதானே இப்படு கொலைகள், மிரட்டல்கள் .

சிவில் சொசைட்டியை வென்றெடுப் பதே எங்கள் இறுதி நோக்கம் என்பது சங் பரிவார் முழக்கம். சமூக சமத்துவமின்மை மிகுந்த - சாதிய படி நிலை கொண்ட இந்துசமூகத்தை வெறும் வாதம் மூலமோஅல்லது சில கவர்ச்சிகரமான கோஷங் கள் மூலமோ மட்டும் பிடித்து வைக்க முடியாதென்பது ஆர்எஸ்எஸ் நன்கறி யும்; எனவே எதிர் குரல் மற்றும் விமர்சனங்களின் கழுத்தை நெரித்துக் கொல்வதே அதன் ரகசிய வியூகம். ஆர்எஸ்எஸ் பாசிச அமைப்பு என்பதாலும் - பாஜக கூட அதன்கண்ணசைவுக்கு கட்டுப்பட்டது என்ப தாலும் அதன் பல்வேறு பிரிவுகளுக்கு தனித்தனி வேலைத் திட்டம் வகுத்துக் கொடுத்து அவை மூலம் சமூகப் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது . தேசத்தை ஒரு இருண்ட மவுனத்தில் ஆழ்த்த வஞ்ச கவலை பின்னுகிறது. இந்த பாசிச வேலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் இப்படுகொலை. வழக்கம் போல்இதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லைஎன அவர்கள் நழுவி விடுவார்கள். குடும்பச் சொத்துத் தகராறால் தான் இவர்கள் கொல்லப்பட்டார்களெனக் கூட கூசாமல்ஒரு கதை புனையலாம்; அதையும் ஊடகங்கள் பரப்பும். இந்த ஆபத்தான பாஜக -சங்பரிவார் கூட்டு செயல்பாட்டை மருந்துக் கும் இரா.திருநாவுக்கரசு சொல்லாமல் விட்டது ஏன் என்பது தான் எமது சந்தேகம். ஆக ஹிட்லர் - முசோலினி ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலை பாஜக - சங் பரிவார் கூட்டம் புதுப்பிக்கிறது என்பதே இப்படு கொலைகள் உணர்த்தும் சேதி.

நன்றி : தீக்கதிர் 8-10-2015 .


0 comments :

Post a Comment