ஸ்மார்ட் சிட்டி : இடியும் கனவுகள்

Posted by அகத்தீ Labels:
ஸ்மார்ட் சிட்டி : இடியும் கனவுகள்

சென்னை, பெங்களூரு , ஹைதரா பாத் போன்ற அனைத்துநகரங்களிலும் தினசரி காலையில் ஒரு காட்சியைக் காணலாம் . அன்றாட தினசரிகளில் சொரு கப்பட்டு வரும் அடுக்கக விளம்பரங்கள் -சனி , ஞாயிறுகளில் கத்தைகத்தையாய் இத்தகு விளம்பரங்கள் - அதற்கும் மேல்கணினியை , அலைபேசியைத் திறந்தாலேகொட்டும் இந்த விளம்பரங்கள். ஓரளவு வாங்கும் சக்தியுடைய ,அதாவது வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புள்ள சொந்த வீட்டுக் கனவைச் சுமந்து கொண்டிருக்கும் மத்தியதர வர்க்கத்தை நோக்கித்தான் இந்த விளம்பர வலைவிரிப்பு . புற்றீசலைப் போல் முளைக்கும் இந்த காங்கிரீட் காடுகளைப் பற்றி செய்யப்படும் விளம்பரங்களுக்கும் யதார்த்தத்துக்கும் பெரும்பாலும் சம்மந்தமே இருப்பதில்லை. குடிநீர் , சாக்கடை , சாலை , கழிவுநீர்,போக்குவரத்து எல்லாமே பிரச்சனையாக வே இருக்கும் . விதிமீறல் என்ற சொல்லின் முழுப்பொருளாகவே இந்த அடுக்ககங்கள் இருக்கும் .
சொந்த வீட்டு ஏக்கத்தில் லட்சக் கணக்கான மத்தியதர மக்களும் ஏழைகளும் ஆலாய்ப்பறந்து கொண்டிருக்கும் நாட் டில் அடுக்ககங்கள் கொள்வாரின்றி தேங்கிநிற்கும் காட்சியை என்னென்று சொல் வது ? சென்னையில் மட்டும் சுமார் 2 லட்சம்வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுக் கொள்வாரின்றிக் கிடக்கின்றன . பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங் களில் இப்படிப் பூட்டிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை பல லட்சங்களாகும் .

அப்பணசாமி முகநூலில் இதனை அவருக்கே உரிய பாணியில் நையாண்டி செய்துள்ளார் ;

“2016 மார்ச் 26; புதுதில்லி இந்தியாவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டு யாரும் குடியேறாமல் கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 20 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 134.அதேசமயம் வீடில்லாமல் அவதியுறும் குடும்பங்களின் எண்ணிக்கை 18 கோடியே 35 லட்சத்து 26 ஆயிரத்து 096. - இப்படியும் ஒரு செய்தி வரலாம்அவரின் இந்த கற்பனையை மெய் யாக்கிவிடுவதை நோக்கி நிலைமை நகர்கிறது .கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடியின் வளர்ச்சி மயக்கத்தில் இந் நிலை இதுவரை இல்லாத அளவு சீர்கெட்டுள்ளது . ஏன்இந்த அவலம் ? அண்மை யில் பெரும் விவாதமானது இவ்விவகாரம்.

வீட்டுக்கடன் வட்டிக் குறைப்பு


2008-ல் இது போன்ற சூழல் உருவானபோது, வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தை 8சதவீதமாக குறைத்தோம். அது நல்ல விளைவை உண்டாக்கி யது. ஆகையால், இப்போதும் வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந் ததி பட்டாச்சார்யா. அப்போதும் நல்ல விளைவை உருவாக்கவில்லை என்பது வேறு சங்கதி .

இதற்குப் பதில் அளிக்க முயன்ற ரிசர்வ் வங்கிஆளுநர் ரகுராம் ராஜன் இன்னொரு முனைக்குப் போனார் . கடந்த ஆண்டு மட்டும் வங்கிகள் கொடுத்த வீட்டுக்கடன் ரூபாய் 88,400 கோடி எனப் புள்ளிவிபரம் தருகிறார் . இது வங்கிக்கடனில் 21 விழுக்காடு என்கிறார். ஆக வட்டி குறைப்பு பிரச்சனை இல்லை யாம்வீடுகளின் விலை அபரிமிதமாக அதிகரிப்பதுதான் காரணமாம்அத்தோடு நில் லாமல் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் லாபவிகிதத்தைக் குறைத்து வீடுகளின் விலையைக் குறைக்க வேண்டும் என உபதேசம் வேறு செய்துள்ளார் .

 ஆனால் லாப விகிதத்தைக் குறைத்து சிமெண்ட் , கம்பி முதலிய கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஏன் மறந்தும் கூறவில்லை என்கிற சந்தேகம் சாதாரண குடிமகனுக்கு எழுந் தால் தப்பே இல்லை .ஆக சொந்த வீட்டுக்கனவு நிறைவேறத் தடையாக இருப்பது வீட்டுமனைவிலை ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் தாறு மாறாக உயர்த்தப்படுவது; கட்டுமானப் பொருட்களின் விலைஉயர்வு; அடுக்ககங்களின் அதீத விலை;வங்கிக்கடனுக்கு வட்டிவிகிதம் அதிகமாயிருப்பது , வங்கிக்கடன் வாங்கியவன் படும் துயர் தனி நாவலாகும் அளவுகொடுமையாக இருப்பது; இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம் . அடிப் படை வசதிகள் கேள்விக் குறியாகும் இடங்களை சாதாரண மக்கள் வாங்கவே நிலை மை இப்படி கழுத்தை நெரிக்குது எனில், மோடி சொல்லும் ஸ்மார்ட் சிட்டி வந்தால் எப்படி இருக்கும்? என்னாகும் ?

ரகுராம்ராஜன் கேட்க மறந்த கேள்வி


சரி ! மோடியின் ஸ்மார்ட் சிட்டியில் கொஞ்சம் பயணிப்போம் கனவில்தான் . ஸ்மார்ட் சிட்டி எனப்படுவது நவீன நகரம்; “ பட்டனைத் தட்டிவிட்டா இட்லி யும் சட்டினியும் சட்டுன்னு வந்துரும்னு கலைவாணர் கனவு கண்டது போல்தான் இந்த நகரமும் .இங்கே மின்சாரம் , குடிநீர் தட்டுப்பாடே இருக்காதாம் . சாலைகள் முகம் பார்க்கிறமாதிரி பளபளன்னு மின்னுமாம் ; சாக்கடை அடைப்பு , குப்பைபிரச்சனையே இருக்காதாம் ; எல்லாவற்றை யும் கணினி மூலம் இணைத்து கண்காணிப்பார்களாம் ; நகர் முழுவதும் வைபி இணையஇணைப்பு இருக்குமாம் ; வீட்டைப் பூட்ட மறந்திட்டீங்களா ? சமையல் காஸைமூடவில்லையா ? பேனை நிறுத்தவில்லை யா? பிரச்சனையே இல்லையாம் . உங்க அலைபேசி மூலமே எல்லாம் செய்திடலா மாம் . ஆனால் நாற்கரச் சாலையைப் பயன்படுத்த டோல்கேட்டில் சுங்கம் கொடுப்பதுபோல் ஒவ்வொன்றுக்கும் காசு கொடுக்கணும்; எல்லாவற்றுக்கும் மீட்டர் பொருத்தப்படும் ;மூச்சுவிட மீட்டர் பொருத்த மட்டுமே இன்னும் முடிவெடுக்க வேண்டி யுள்ளதாம் . வசதி வேண்டுமென்றால் சும்மாவா? காசு கட்டுவதற்குக்கூட கியூ வில் நிற்க வேண்டாமாம் .. அலைபேசி மூலமே கட்டலாமாம் .இவ்வளவும் இருக்கும் போது விலை அதுக்கேற்ற மாதிரிதானே இருக்கும்! அதுவும் தனியார் -அரசு கூட்டு றவில், அதாவது வெளிநாட்டு ரியல் எஸ் டேட் கொள்ளையர்களும் அம்பானி, அதானி கொள்ளையர்களும் முதலீடு செய்து உருவாக்கும் ஸ்மார்ட்சிட்டி விலை சும்மாவா ? அதிகம் இல்லை ஜெண்டில்மேன் சும்மா கோடிகளில்தான் ஆரம்பிக்கும் …... அவ்வளவுதான் ….. கோடீஸ்வர கோமான்களின் கனவு இல்லம் ; பார்த்துப் பார்த்து நம்மை ஏங்க வைக்கும் ;வாங்க வழிகிடைக்குமா ?விலை லட்சங்களில் இருக்கும்போதே சாதாரண அடுக்ககங்களே விற்காமல் தேங்கும் போது கோடிகளில் ஸ்மார்ட் சிட்டிஎப்படி போணியாகும் ? ரிசர்வ் வங்கிஆளுநர் ரகுராம் ராஜன் கேட்க மறந்தகேள்வி இதுவே -நம் முன் விஸ்வரூப மெடுக்கும் கேள்வியும் இதுவே . மோடி களும் அவர்களின் கைத்தடிகளும் யோசிக் காத கேள்வியும் கூட .இந்த ஸ்மார்ட் சிட்டிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வெளி யேற்றப்படும் ஸ்மார்ட் அகதிகள் - ஸ்மார்ட்சிட்டி அருகே ஸ்மார்ட்சேரியாகவாழவேண்டுமோ என்னவோ !
உலக வங்கி சொன்னபடி செய்ததால் நடந்தது என்ன?
ஸ்மார்ட் சிட்டி அமெரிக்காவுல இருக் குது , ஐரோப்பியாவில இருக்குது , சீனாவில இருக்குதுன்னு வாய்ப்பறை கொட்டு வோரே, அங்குள்ள சம்பளத்தை இங்கு கொடுப்பீரோ எனக் கேட்டால் பதில் கிடைக்காது .அங்கும் அது மிகக்குறுகிய எண்ணிக்கையிலான பெரும்பெரும் பணக்காரர்களுக்கே பயன்படுகிறது . இங்குள்ள களநிலையை ஆராய்ந்து திட்டமிடாமல் வெளிநாட்டுக் கொள்ளைக்காரன் சொல்வதைக் காப்பியடித் தால் என்ன நடக்கும் ?

ஒரு அனுபவச் சித்திரம் பாருங்கள் ....... 

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் சகல வசதிகளுடன் வீட்டுமனை விற்க, உலக வங்கி வழங்கிய கடனை நிபந்தனையை ஏற்று வீட்டுவசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகள் நிலை என்ன ஆனது ? எடுத்துக்காட்டாக திருவள்ளூரை அடுத்த செவ்வாய் பேட்டை ரயில் நிலையத்துக்கு மிக அருகே உருவாக்கப்பட்ட தீரூர் கிராமத்தில் அமைந்த வீட்டுவசதி குடியிருப்பு களை ஸ்கேன் செய்தால் அதிர்ச்சி ஏற்படும்.இருஅடுக்கு வணிக வளாகம் , பாலிடெக் னிக் , திருமண மண்டபம் . மருத்துவமனை, உயர்நிலை குடிநீர்த் தொட்டி, சுமார் 3500வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வசதிகள் இணைப்பு, சாலைகள், தெரு விளக்கு என சகல ரெடிமேட் வசதிகளோ டும் வீட்டுமனைகள் விற்கப்பட்டன . 35 ஆண்டுகளுக்குப் பிறகும் சுமார் 500வீடுகள் கூட எழவில்லை .வணிகவளாகம், திருமணக்கூடம் ,பாலிடெக்னிக் எல்லாம் பாழடைந்து கிடக்கிறது . இப்போது அதையாராவது வாங்கி பயன்படுத்த நினைத் தால் வட்டி , வட்டிக்கு வட்டி , குட்டி, அபரா தம் என வீட்டுவசதிவாரியம் சொல்லுகிற விலைக்கு யாரும் வாங்கமாட்டார்கள். குடிநீர்த் தொட்டி இன்னும் செயல்படத் தொடங்கவே இல்லை; பாதாளச் சாக்கடை செயல்படவில்லை; சும்மா செப்டிக் டேங்காக கொஞ்சகாலம் பயன்பட்டது ; அப்புறம் அதுவும் இல்லை; புதர் மண்டி பாழடைந்து கிடக்கிறது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்து கிடக்கிறது. சுற்றிலும் தலித் மக்கள் அதிகம் வாழும் கிராமமக்களுக்கு எந்த அடிப்படை வசதி யும் செய்து கொடுக்காமல் இங்கு மட்டும் பெரிதாக செய்யப்பட்ட அனைத்தும் சமூகமுரணை அதிகரிக்கவும், அனைத்தும் விரயம் ஆகவும்தான் வழிசெய்தது.

கொஞ்சமும் கள யதார்த்தத்தை உணராமல் உலகவங்கி சொல்லுக்கு ஆடினால்என்னஆகும் ? இந்த வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு உதாரணம் .தமிழகம் முழுவதும் இன்னும் பல இதுபோல் உண்டு.இதனையாராவது ஆய்வுப் பொருளாக்கி ஆராய்ந்து அறிக்கை கொடுத்தால் அது மிகப்பெரிய படிப்பினையாகும். ஸ்மார்ட்சிட்டி கனவுக்கு அது அழுத்தமான எச்சரிக்கையாகும்.

மவுலிவாக்கம் அடுக்ககம் தகர்ந்தது போல் ஏழை மற்றும் நடுத்தரமக்களின் சொந்த வீட்டுக் கனவு இடிந்து கொண்டி ருக்கிறது . மோடி அரசோ ஸ்மார்ட் கனவுகளில் யதார்த்தத்தை - ரணத்தை மூடிமறைக்க முயலுகிறது என்பதே உண்மை.

சு.பொ.அகத்தியலிங்கம் .நன்றி : தீக்கதிர் 14 -09-2015 

1 comments :

  1. விடுதலை

    அருமையான பதிவு

Post a Comment