ஆனாலும்........

Posted by அகத்தீ Labels:




ஆனாலும் ………

=======================


தொடங்கிவிட்டது
பிள்ளையார் விற்பனை .

பத்து  ரூபாய் முதல்
லட்சம் ரூபாய் வரையிலும்
அதற்கு மேலும்
விதவிதமான பிள்ளையார்கள்.


அவரவர் சக்திக்கேற்ப
வாங்கிச் செல்லலாம் .


வணங்கலாம்.
வழிபடலாம் .
கொண்டாடலாம் .

அப்புறம்
போட்டு உடைக்கலாம்.
நீர் நிலையில் கரைக்கலாம்.

ஆனாலும்,
நீங்கள்
நாத்திகர் இல்லை … !!!



- சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment