ஒரு பிடி சோறா ? முழுவயிறா ?
---------------------------------------------------------------------------------
ஒருபிடி சோறா ? முழுவயிறா ?
உனக்கெது தேவை ? முடிவெடுடா !
வேட்டி சேலை இலவசமா ?
வேலைக் கேற்ற சம்பளமா ?
உனக்கெது தேவை முடிவெடுடா !
உன் விரல் நுனியில் உலகமடா !
[ ஒரு பிடி ..]
கிராமமும் வளரணும் நகரமும் வளரணும்
அதுவே நாம் சொல்லும் வளர்ச்சி ! – சரியான வளர்ச்சி
வயிலில் செழிக்கணும் தொழிலில் நிலைக்கணும்
காசு பணம் கையில் புழங்கணும் – மக்கள் கையில் புழங்கணும்
[ ஒரு பிடி..]
கல்வியும் வேலையும் கனிந்து கிடைக்கணும்
அறிவியல் நுட்பத்தில் இணைந்து நடக்கணும் – துணிந்து நடக்கணும்
அகிலம் போற்ற சாதனை படைக்கணும்
சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கணும் – துணிந்து நிற்கணும்
[ ஒரு பிடி ]
அடித்தளம் இல்லா கட்டிடங்கள் என்றும்
இடிக்கும் மழைக்கும் தாங்காது –நொடியும் தாங்காது
அடித்தள மனிதன் உயர்த்தாமல் விடியாது – பொழுது விடியாது
இடதுசாரி பாதையிலே நடைபோடு ! விடை தேடு !
[ சிபிஎம் மாநில மாநாட்டின் போது வெளியிடப்பட்ட முனு கோட்டீஸ்வரன் இசையில்
‘மக்கள் பாடல்’ ஒலிப்பேழையில் என் பாடல் .. நான் எழுதிய முழுவடிவம் இது ]
0 comments :
Post a Comment