கோவணம் கட்டியவர்களை
பைத்தியக்காரர்கள்
எனச் சொல்லும்
ராஜா
நிர்வாணமாக
இருக்கிறார்
எனச் சொல்வதுதான்
தேசவிரோதம்
!
நிணம் ஒழுகும்
வாயை
துடைத்துக்கொண்டே
‘சாந்தமூர்த்தி’
என
தனக்குத்தானே
சொல்லிக்கொள்ளும்
ராஜாவை
மோசடிக்காரன்
என்பவன் நிச்சயம்
தேசவிரோதியே
!
“ராம் ! ராம்
“ “சிவ ! சிவ !”
நாமம் ஜெபித்தபடி
நச்சை ஊரணியில்
ஊற்றும்
உத்தமன் பெயர்
பாடி !
விஷ்வகுருவென
தாழ்பணிவதே
தேஷ்பக்தி
!தேஷ்பக்தி ! தேஷ்பக்தி !
சுபொஅ.
16/09/25.
0 comments :
Post a Comment