அணையா பெரும்
அடுப்பு
வெப்ப அலை
அணல் காற்று
வெறும் சொற்களாகவா
இருக்கிறது ?
இல்லை.இல்லை.இல்லவே
இல்லை.
பிரளயத்தின்
முன்னறிவிப்பாக அல்லவா இருக்கிறது.
தோட்ட நகரம்
பெங்களூரு
காங்கிரீட்
காடாகிவிட்டது
தப்பிப் பிழைத்த
மரங்கள்
மூச்சுவிடவும்
காற்று இல்லை .
நீரைத் தேடித்
தேடி நீண்ட வேர்கள்
சோர்ந்து
வறண்டுவிட்டன .
பெங்களூரில்
வீடுகளுக்கு
ஜன்னல் என்பதே
அநாவசியம்
அப்படி ஒரு
காலம் இருந்தது .
ஏசி குளிரூட்டி
இல்லாமல்
குடியிருக்கவே
முடியாதென்கிற
கொடுங்காலமும்
வந்துவிட்டது .
ஓடும் வாகனங்களில்
தண்ணீர் லாரியே
அதிக எண்ணிக்கை
என்பது வெறும்
புள்ளிவிவரமல்ல
! பேரிடரின் குறியீடு !
காவிரித்
தண்ணீர் குழாய்களில்
வெப்பக் காற்று
மட்டுமே வருகிறது !
வேதனையின்
உச்சமல்லவா இது ?
மரங்களை வெட்டும்
போது
காடுகளை அழிக்கும்
போது
நீர்நிலைகளை
தூர்க்கும் போது
இலக்கின்றி
அடுக்குமாடிகளை எழுப்பும் போது
யோசிக்கவும்
இல்லை
எச்சரித்தோர்
குரலுக்கு செவி சாய்க்கவும் இல்லை
இப்போது அழுது
புலம்பி என்ன பயன் ?
பெங்களூர்
மட்டுமா ?
வெற்றி எக்காளமிடும்
ஒவ்வொரு நகரமும்
அணையா பெரும்
அடுப்பு ஒன்றை
மறைத்து வைத்திருக்கிறது
!
இப்போதும்
காலம் கடந்துவிடவில்லை
விழித்துக்
கொள்ள….
சு.பொ.அகத்தியலிங்கம்
.
24/4/2024.
0 comments :
Post a Comment