தறுதலைத்தனம்
என்பது உணர் !
நீ
அணிந்திருக்கும்
உடையில்
நீ
உண்ணும் உணவில்
நீ
குடியிருக்கும்
வீட்டில்
நீ
வாழும் வாழ்க்கையில்
நீ
புழங்கும்
பண்ட பாத்திரங்களில்
நீ
அனுபவிக்கும்
நவீன வசதிகளில்
உலகத் தொழிலாளியின்
வியர்வை வாசத்தை
உன்னால் உணரமுடியவில்லையா
?
சரி ! உன்
மூளை வளர்ச்சி அவ்வளவுதான்
ஆனாலும் புனித
ஆத்மா என
உன்னைச் சொல்லிக்
கொள்பவனே !
பார்ப்பனிய
வியர்வையிலே
மட்டுமே உருவான
ஒன்றையேனும்
உன்னால் சுட்ட
முடியுமா உன்னால்…
தலித்தோ சூத்திரரோ
கறுப்பரோ
வெள்ளையரோ
இந்துவோ முஸ்லீமோ
கிறுத்துவரோ
தமிழரோ இந்திக்காரரோ
இங்கிலீஷ்காரரோ
அவரோ இவரோ
எவரோ
ஒவ்வொருவர்
வியர்வையும்
ஒவ்வொருவர்
ரத்தமும்
ஒவ்வொருவர்
அறிவும்
இல்லாமல்
உன் வாழ்வில்
ஒரு நொடிகூட
நகராது !
ஒவ்வொரு பொருளிலும்
ஒவ்வொரு செயலிலும்
கூட்டு உழைப்புதான்
சாதி மத இன
கலப்புத்தான் …
இந்த பொதுமையை
உணராத
தலைக்கனம்
பிடித்த உன் தனித்துவம்
தறுதலைத்தனம்
என்பது உணர் !
சுபொஅ.
23/2/2023.
0 comments :
Post a Comment