நிலமென்னும் நல்லாள்.
மலர் சிரித்துப் பார்த்திருப்பீர்
மண் சிரித்துப் பார்த்தீரா !
வள்ளுவனும் பிழை செய்தான்!
இலமென்று அசைஇ இல்லை
எங்க ஊர் உழவன்
இரவென்றும் பகலென்றும்
பாராமல் உழைத்தான்
உழுதபின் கணக்குப் பார்த்தான்
கடன் புதைகுழியில் மூழ்கிச் செத்தான்.
நிலமெங்கும் ரியல் எஸ்டேட்
வண்ணக் கொடிகள் பறந்தன
நிலமெனும் நல்லாள் நகைத்தாள்
வறண்ட சிரிப்பு வானை இடித்தது
நாட்டு நிலை எண்ணி வெடித்தது !
சு.பொ.அகத்தியலிங்கம்.
11 அக்டோபர் 2019.
0 comments :
Post a Comment