அது வரலாற்றுப் பிழை! நீ

Posted by அகத்தீ Labels:

அவர்கள்
அடிக்கிறார்கள்
மிதிக்கிறார்கள்
அடக்குகிறார்கள்
நசுக்குகிறார்கள்
சுரண்டுகிறார்கள்
இப்படியே
இனியும்
சொல்லிக்கொண்டே
இருக்காதே !
அது வரலாற்றுப் பிழை!
நீ
இன்னும்
திருப்பிக் கொடுக்கத்
தயாராகவில்லை
என்று வேண்டுமானால் சொல் !
தாமதமாயினும்
ஒவ்வொரு வினைக்குக்
எதிர்வினை செய் !
வரலாற்றின் கட்டளை
அதுவே !
[ இது அவசர காலத்தில் இளம் ரத்தம் துடித்த போது எழுதியது. இப்போது நினைவுக்கு வந்தபடி பதிகிறேன்.]
சுபொஅ.
5/10/2019.

0 comments :

Post a Comment