ஓர் வேண்டுதல்

Posted by அகத்தீ Labels:


ஓர் வேண்டுதல்இறைவா !
அப்படி ஒருவனாக நீ இருந்தால்
இறைவா !


அருள்கூர்ந்து
கொஞ்சகாலம்
தலைமறைவாய்ப் போய்விடு !


இல்லையேல் !
நீ
அண்டை அயலானை நேசி என்றால்
உன்னைக் கொன்றுவிடுவார்கள் !


உன்னை
அந்நியக் கைக்கூலி தேசவிரோதி
என
முத்திரை குத்திவிடுவார்கள் ..


நீ
அவர்கள்பேசுவதைக்
கேட்டுக்கொண்டே இருந்தால்
உன்னையும் விஷமாக்கிவிடுவார்கள்...
உன்னிடம் இருப்பதாய் நம்பப்படும்
கருணை ,அன்பு ,மன்னிக்கும் அருங்குணம்
அனைத்தும்
பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விடும்..


குரோதம் ,வெறுப்பு ,பழிவாங்கல் மிகுந்த
சூப்பர் சைத்தானாய் பிசாசாய்மாறிப் போவாய் உன்
குடும்பத்துக்குள்ளும் வெட்டுகுத்தாகிப்போகும்


இறைவா !
அப்படி ஒருவனாக நீ இருந்தால்
இறைவா !


அருள்கூர்ந்து
கொஞ்சகாலம்
தலைமறைவாய்ப் போய்விடு !சு.பொ.அகத்தியலிங்கம் .0 comments :

Post a Comment