‘சுபம் லாபம்’
சந்நியாசியோ
சந்நியாசினியோ
சாபம் கொடுத்தால்
எதிரிகள்
எரிந்து பஸ்பமாகி விடுவார்களே!
பின் எதற்கு சட்டங்கள்
அரசு இயந்திரங்கள் ?
சத்ரு சம்ஹார யாகம்
செய்வித்தால்
எதிரிகள்
அழிந்தே போய்விவிடுவார்களே!
அப்புறம் ஏன்
ராணுவம்
போர்த்தளவாடங்கள்
பெரும் செலவு ?
தியானம் செய்தாலே
எல்லாம் சித்திக்குமே !
அப்புறம் ஏன்
ஹெலிகாப்டரில்
பறந்து பறந்து பிரச்சாரம் ?
தர்மம் தலை காக்குமாம்
ஊருக்கே சோறுபோட்ட
விவசாயி
தூக்கில் தொங்குவது ஏன் ?
கேள்வி கேட்காதே !
நீ
இந்து விரோதி ஆகாதே !
ஆண்டி இண்டியன் ஆகாதே !
சாபம் கொடு!
சத்ரு சம்ஹார யாகம் செய் !
தியானம் செய் !
கார்ப்பரேட்டுகளும்
கார்ப்பரேட் சாமியார்களும்
கார்ப்பரேட் சவுக்கிதார்களும்
மேலே மேலே ஏற
குனிந்து
படிக்கட்டாகு !
‘சுபம்
லாபம்’
அவர்களுக்கும் !
சுபொஅ.
0 comments :
Post a Comment