உழவனின் கோபக் குரல் உழன்றும் உழவே தலை என்றும் உலகத்தாற்கு அச்சாணி என்றும் உழவினார் கைமடங்கின் சந்நியாசிக்கும் சோறில்லை என்றும் உழாமல் சோம்பி இருப்பின் நிலமென்னும் நல்லாள் நகுமென்றும் -இன்னும் பலவாக தோள்மீது சுமந்து கொண்டாடிய உழவர் படும்பாடு உரைக்கும் தரமோ இன்று ! உழவர் திருநாளின் வாழ்த்துரைத்தால் போதுமோ பொங்கும் கண்ணீரை யார் துடைப்பார் ? பச்சை வயலை எல்லாம் எங்கும் விஷவாயு களமாக்கி மலடாக்கி தூர்த்துவிட்டு உழவன் பெருமை உரைப்பதும் வெறும் பேச்சே! நீர்நிலையைத் தூர்த்துவிட்டு மனைபோட்டு விற்றுவிட்டு உழவின் தேவையை ஊர் முழுக்க முழங்குவதில் லாபம் என்ன ? உழவை அழித்துவிட்டு டிஜிட்டல் சிப்ஸ்சை திண்று பசியாறுவையோ ? போகி நெருப்பில் பொசுக்கிடு உன் மெத்தனத்தை தூக்கத்தை அகத்தில் நெருப்பேற்றி சூடும் சொரணையும் உள்ளவனாய் மாறிவிடு! யாரோ ஒரு தலைவர் விடுதலையை தருவார் என நம்பி ! காலில் விழும் கலாச்சாரத்தைப் போகி நெருப்பில் பொசுக்கு சுயமரியாதை என்பது வெறும் சூத்திரத்தில் அடங்குவதல்ல அநீதி நடக்குமிடமெல்லாம் ஆர்த்தெழும் போர்க்குணமே! வெறுங்கையில் முழம்போட்டு வீண்க்னவு காணாமல் வாழ்க்கையை வென்றெடுக்க வியூகத்தில் சங்கமிப்பீர் ! சு.பொ.அகத்தியலிங்கம் .
Labels
- அலசல் ( 122 )
- அனுபவம் ( 69 )
- ஆய்வு ( 4 )
- இலக்கியம் ( 60 )
- கட்டுரை ( 8 )
- கவிதை ( 309 )
- குட்டிக்கத ( 3 )
- கேள்விகள் தொடர ( 1 )
- சl ( 1 )
- சிறுகதை ( 14 )
- சொற்கோலம் ( 12 )
- தினம் ஒரு சொல் ( 101 )
- நினைவுகள் ( 6 )
- நூல் மதிப்புரை ( 186 )
- புரட்சிப் பெருநதி ( 53 )
- வாழப்பழகு ! ( 2 )
- விவாத மேடை ( 21 )
About Me
Followers
Blog Archive
-
▼
2019
(
63
)
-
▼
January
(
11
)
- sorkolam 6
- corkolam 5
- sorkolam 4
- சொற்கோலம்.3
- சொற்கோலம். 2. ஓர் நொடியில் அவன் / அவள் என்பது மாற...
- சொற்கோலங்கள். 1.
- சொற்கோலம். 1 எந்த விழாக் கொண்டாட்டமும் ஏதேனும் கீ...
- pபோஓபோ
- பிளாஸ்டிக் குப்பைகளும் … கம்ப்யூட்டர் சவால்களும் ..
- தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை...
- எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !
-
▼
January
(
11
)
Powered by Blogger.
0 comments :
Post a Comment