பிடிக்காமலே போகுமோ !
இருட்டில் வாழப்பழகு
உனக்கு
வெளிச்சம் பிடிக்காமலே போகும் !
இரைச்சலில் வாழப்பழகு
உனக்கு
அமைதி பிடிக்காமலே போகும் !
நாற்றத்தில் வாழப்பழகு
உனக்கு
நறுமணம் பிடிக்காமலே போகும் !
அடிமைச் சேற்றில்
அமிழ்ந்து பழகு
உனக்கு
சுதந்திர வெளி பிடிக்காமலே போகும் !
[ சத்தியமாய் இது அரசியல் கவிதை இல்லேன்னு நீங்க நம்பத்தான்
வேணும் ]
இருட்டிலேகூட
மெல்ல மெல்ல
ஒவ்வொன்றாய் தட்டுப்படும் !
இரைச்சலில்கூட
கொஞ்சம் கொஞ்சமாய்
சப்த பேதம் கேட்கலாகும்!
நாற்றத்தில்கூட
போகப்போக
மணத்தை உணரலாகும்!
அடிமையில் சுகங்கண்டோர்
நொடிப்பொழுதேனும்
விழிப்பரோ சொல்வீர் ?
[ இதுவும் அரசியல் கவிதை அல்ல நம்புங்கள் ]
0 comments :
Post a Comment