நானின் ஜாதகம்

Posted by அகத்தீ Labels:
 
நானின் ஜாதகம்ஏணியை உடைத்துவிடு
எனக்கு போட்டியாய் இன்னொருவர்
இங்கு வர வேண்டாம் !


பாலத்தை தகர்த்துவிடு
என் தனிமையை குலைக்க
ஒற்றையாளும் வேண்டாம் !


நான் , நான்மட்டுமே
எனக்கு , எனக்குமட்டுமே
எல்லாமும் வேண்டும் !


ஏன் யாருமே என்னை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ?
நான் சரியாகத்தானே இருக்கிறேன் !


அதோ! எனக்கு குரு கிடைத்துவிட்டார் !
தியானம் , யோகா ,ஆழ்நிலை தியானம்
என்னை நான் கண்டு கொள்வேன் !


அங்கென்ன ஒரே பெரும் கூச்சல் ?
அன்னதானக் கூடத்தில் அடிதடியா?
சாந்தி நிலவ கதவைச் சாத்து!


விளக்குத் தீ வீட்டை எரிக்கிறது!
ஐயையோ ! ஐயையோ !
யாராவது காப்பாற்ற வாருங்கள் ![ பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் உயர் ஊதிய தீவுத்திடல்களின் மனநிலையைக் கண்டு மனம் வெதும்பி எழுதியது ]

0 comments :

Post a Comment