theelivaai avargal

Posted by அகத்தீ Labels:






இந்துத்துவாவின் நயவஞ்சகத்தை ஆதாரங்களுடன் தோலுரித்தேன்
அவன் என்னை சீனாவின் கைக்கூலி என வசை பாடினான் ……….


எல்லா மதவெறியும் ஒன்றுதான் ;கொடுநஞ்சுதான் என உரக்கச் சொன்னேன்
போலி பகுத்தறிவாளன் என என்னை எள்ளி நகையாடினான்…..


சாதி ஆதிக்கத்தை சாய்க்கவேண்டும் சமூகநீதி பூக்கவேண்டுமென முழங்கினேன்
ஊரின் அமைதியைக் கெடுக்கும் தறுதலை என என்மீது காறி உமிழ்ந்தான் ……….


உலகமயமும் தனியார் மயமும் கார்ப்பரேட் கொழுக்கவே என ஆதாரத்தோடு சொன்னேன்
தேசவளர்ச்சிக்கு விரோதி இவனென சவுக்கால் என்னை விளாசித் தள்ளினான் ………


மனித உரிமை , பெண்சமத்துவம் பாதுக்காக்க என்னாலியன்ற குரல் எழுப்பினேன்
மேற்கத்திய சிந்தனையின் நாசகர தூதுவன் இவனென நாற்சந்தியில் வசைபாடினான்……


 தந்த வாக்குறுதிகள் எதுவும் ஏழைகள் இல்லம் வரவில்லை என யதார்த்தம் விளக்கினேன்
செத்துபோன கம்யூனிசத்தை கட்டிகொண்டு ஏன் மாரடிக்கிறாய் எனச் சீறிப்பாய்ந்தான் …..


அவரை இவரை பார்த்துவிட்டோம் ஆனது எதுவுமில்லை ;மாற்றம் வேண்டுமென்றேன்
அவரின் கையாள் ,இவரின் அடியாள் என அவதூறு புனைந்து அள்ளிவிட்டான் …..


ஆக, யாரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாய் உறுதியாய் இருக்கிறார்கள்
 நாமும் முன்னிலும் தெளிவாய் முன்னிலும் உறுதியாய் நம் போரினை முன்னெடுப்போம் …………
Show less

0 comments :

Post a Comment