புரட்சி எப்போது எழும்
?
இளமையை அலைக்கழித்த ஓயாத
கேள்வி .
சமூக அறிவியல் வசப்பட்டபோது
மனதும் மூளையும்
விடை தேடவும் விடை சொல்லவுமாய்
கழிந்தன நாட்கள்.
இன்னும் இற்றுப்போகாத
புரட்சிக் கனவுகளுடன்
எஞ்சிய நாட்கள் நகர்கிறது
.
புரட்சி என்பது வெறும் கனவா
?
எத்தனை காலம் காத்திருப்பதோ
?
வசந்தம் எல்லோருக்கும் பூக்கும்
வரை
வாழ்க்கை எல்லோருக்கும்
வாய்க்கும் வரை
புரட்சி என்பது கனவல்ல
புறக்கணிக்க முடியா பெரும்தேடல் ….
புரட்சி என்பது வெறும் நம்பிக்கை
அல்ல
மானுட நேசத்தின் மாறா இயக்கம்
.
தாமதப்படலாம்
தடுக்கவும் முடியாது
தவிர்க்கவும் இயலாது
காலமென்னும் பெருவெளியில்
இக்காத்திருப்பு என்பது
சிறுதுளியே !
0 comments :
Post a Comment