iருட்டு

Posted by அகத்தீ Labels:




திசையெட்டும் அப்பிய இருள்
மேலும் அடர்ந்து மெல்ல நகர்ந்து
என்னைச் சூழந்தது .

தீப்பெட்டி கைவசம் வைத்திருக்கும்
வழக்கம் எனக்கு
எப்போதும் இருந்ததில்லை .

அலைபேசியை இயக்க
நினைத்து எடுத்தேன்
ஆற்றல் தீர்ந்துபோயிருந்தது .

உதடுகள் ஒட்டிக்கொண்டன
குரல் எழும்பவில்லை
கைகால்கள் தாளமிட்டன

இருட்டு மேலும் அடத்தியானது
இருள் கிணற்றில்
மூழ்கிக் கொண்டிருந்தேன் .

இனியும் தாமதிப்பதா ?
கூடாது ! கூடாது ! இருட்டை
ஒரு கை பார்த்துவிட வேண்டும் !

மெல்ல கண்களைத் திறந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
பார்வை இருட்டை ஊடுருவியது !

ஆங்காங்கு சலனம் கனவல்ல
என்னைப் போலவே என்
தோழர்களும் விழிக்கிறார்கள் !

தோழா ! தோழா ! நம்மால்
இருட்டை விரட்ட முடியும்
கரங்கோற்க முன்னே வா !



- சு.பொ.அ.

0 comments :

Post a Comment