சும்மா இருக்க முடியல....

Posted by அகத்தீ Labels:




சும்மா இருக்க முடியல …..




கண்மூடி  வாய்பொத்தி இருக்க முடியலே
கண்டும் காணமல் போக முடியலே
கண்ணெதிரே நடப்பதெல்லாம் சகிக்க முடியல
கண்ணிருந்தும் குருடனாக வாழமுடியலே

சோற்றுத் தட்டை மாடாக முட்டித்தள்ளுறான்
கோமாதா எங்க அம்மான்னு வசனம் பேசுறான்
கோவணத்தையும் உருவத்தானே சட்டம் போடுறான்
நாடுநாடா பறந்து அதுக்குத் திட்டம் போடுறான்

கொஞ்சநஞ்ச உரிமையையும் தட்டிப் பறிக்கிறான்
 வளர்ச்சியின்னு கோஷம்போட்டு ஊரை ஏய்க்கிறான்
அம்பானி அதானிக்கு சலாம் போடுறான் – நம்ம
அடிவயிற்றில் கொள்ளிக்கட்டை சொருகி பார்க்குறான்

அரைடவுஸர் பாய்ஸ்கிட்ட அடங்கிப் போகிறான்
அரைவேக்காட்டு பிதற்றல்களை வேதம் என்கிறான்
சாதி மத விஷக்கொடுக்கால் சண்டை மூட்டுறான்
ஹிட்லர் முசோலினி வாரிசாக வேட்டையாடுறான்


- சு.பொ.அகத்தியலிங்கம் .



0 comments :

Post a Comment