திமாகி …. திமாகி …. வெல்லும்….
காலில் விலங்கு
கையில் விலங்கு
வாயில் விலங்கு
போட்ட ராஜக்கண்ணு
மூளைக்கு விலங்கு
போட முடியாமல்
முழிக்கிறார் !
ஆளைப் பிடித்து
சிறையில் போடலாம்
ஆயுள் முழுமைக்கும்
அடைத்து வைக்கலாம்
சோறு தின்னவும்
கைகால் கழுகவும் மட்டும்
விலங்கைக் கழற்றலாம்
சிந்தனையை அடைத்துவைக்க
சிறைக் கம்பிக்கும் வலுவில்லையே !
திமாகி வெல்லும் ! திமாகி வெல்லும் !
சித்தாந்தம் தோற்ற வரலாறு இல்லை !!
சு.பொ.அ.

0 comments :
Post a Comment