ஒரு நிகழ்வில் பங்கேற்று நான் உரையாற்றிய பின் சகோதரி ஒருவர் தனிப்பட்ட முறையில் கேள்விகள் எழுப்ப
நானும் மகிழ்வுடன் உரையாடினேன் . அப்போது பேசியவை வழக்கமானதுதான் . இருப்பினும் மீண்டும்
மீண்டும் தெளிவு படுத்தவேண்டியவை என்பதால் இங்கு அது சார்ந்து எழுதுகிறேன் .
உங்கள் பேச்சில் ஒரு மதத்தை மட்டுமே விமர்சிப்பது
ஏன் என்கிற வழக்கமான கேள்வியோடுதான் அந்த உரையாடல் தொடங்கியது .
நீங்கள் சொல்வது சரிதான் . கீழே பட்டியலில் தரப்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா
? அவை எல்லாமேப்
பகுத்தறிவு
பேசுகிறவை.
ஆனால் ஓர் ஒற்றுமை இருக்கும் .அதை எழுதியவர்கள் தான் பிறந்த மதத்தைச் சார்ந்தே விமர்சித்திருப்பார்கள்
. அடுத்தவர் மதத்தை வம்புக்கு இழுத்திருக்க மாட்டார்கள் .
ஏன்
எனில் தான் சார்ந்த மதத்தை குறைகூறுவது என்பது சுயவிமர்சனம் . அடுத்தவர் மதத்தை குறை
கூறும் போது அது அத்துமீறலாக ; அவதூறாக கருதப்பட்டுவிடும்
. ஆகவே இயன்றவரை அடுத்தவர் மதத்தில் தலையிட மாட்டார்கள் பகுத்தறிவாளர்கள் . இது ஜனநாயக
அணுகுமுறை .[ தவிர்க்க இயலாமல் சில வேளை பிற மதம் சார்ந்து ஒன்றிரண்டு மென்மையான விமர்சனங்கள்
செய்வது உண்டு.ஆனால் பொதுவாகத் தன் மதம் சார்ந்தே உரக்கப் பேசுவார்கள் ]
ஆனால்
, மதவாதிகளோ / மதப் பிரச்சாரகர்களோ அடுத்தவர் மதத்தை அதிகம் இழிவு செய்வார்கள் . தன்
மதம் உயர்வென்று நிரூபிக்க அடுத்தவர் மதத்தில் மூக்கை நுழைத்து கலவரம் செய்வார்கள்
. எல்லா மதவெறியர்களும் இதில் ஒன்றுதான் .அந்த மதம் இந்த மதம் வேறுபாடெல்லாம் இல்லை
.
பகுத்தறிவாளர்களுக்கும்
மதவாதிகளுக்கும் இதுதான் அடிப்படை வேறுபாடு. இங்கே நான் மதவாதிகள் மேல்தான் குற்றம் சாட்டுகிறேன்
; மத நம்பிக்கை கொண்டோர்கள் மேல் அல்ல .
நான் பட்டியலிடும் நூல்கள் …
1 ]நான் ஏன் கிறிஸ்த்துவன் அல்லன் (பெர்ட்ரண்ட் ரசல்)
2 ]மரண சாசனம் (ஜீன் மெஸ்லியர்)
3 ]பேய் பூதம் பிசாசு அல்லது ஆவி (இங்கர்சால் )
4 ]நான் ஏன் நாத்திகன் ஆனேன் – பகத்சிங்
5 ] நான் ஏன் இந்து இல்லை – காஞ்சா அய்லய்யா
6 ]நான் ஏன் முஸ்லீம் அல்ல – இபின்வராக்
7] கடவுள்
உண்டா ? இல்லையா ? – ஏ.பாலசுப்பிரமணியம்
8 ] கடவுள்
உண்டா ? - ஸ்டீபன் ஹாக்கீங்
பட்டியல்
நீளும்… இங்கு இதோடு நிறுத்திக் கொள்கிறேன். சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர்
, பெரியார் ,குத்தூசி குருசாமி இன்னும் பலர் எழுதிக் குவித்தவை ஏராளம் இங்கு இருக்கின்றது
. மொழி பெயர்ப்பு நூல்களும் நிறைய உண்டு .
சகோதரியோடு
உரையாடலில் மேலும் சொன்னோன் ;
“இன்னொன்று , கணவர் பகுத்தறிவாளராக இருக்கும் போது
மனைவியின் இறை நம்பிக்கைக்குத் தடை இருக்காது . இருபக்கமும் கருத்துரிமை மதிக்கப்படும்
ஜனநாயகம் அங்கு இருக்கும் . ஆயின் கணவர் ஆன்மீகவாதியாய் இருக்கும் போது மனைவி பகுத்தறிவாளராக இருக்க அனுமதி கிடைக்காது .ஆணாதிக்கமும்
சர்வாதிகாரமும் நிலவும் .”
ஒரு சகோதரி
கேட்டார் , “ அது சரி !என் கருத்தை மதித்து
அவர் கோயிலுக்கு வருவதில்லை . இது சரியா ?”
“ அவர் உங்களை
கோயிலுக்கு போகாதே என்று தடுக்கிறாரா ?”
“ இல்லை
.”
“ அப்புறம்
அவரை கோயிலுக்கு வா என நீங்கள் கட்டாயப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம் ? உங்களைப்
போகாதே என அவர் கட்டாயப் படுத்தாத போது ; அவர் வரவேண்டும் என நீங்கள் கட்டாயப் படுத்தாமல்
இருப்பதுதானே ஜனநாயகம் ….”
“ சும்மா
வாங்கண்ணுதான் கூப்பிடுறேன்… அதுவும் வெளியூருக்கு…”
“ கோயிலுக்கு
போகிறவர்கள் எல்லாம் சாமி கும்பிட வேண்டுமென்றோ , பக்தர்களாக இருக்க வேண்டுமென்றோ கட்டாயமில்லை
. சுற்றுலாவாக , கலையை ரசிக்க , இடங்களைப் பார்வையிட , பொழுது போக்காக ,சும்மா துணைக்காக
; மாறுபட்ட கருத்துள்ள போதும் கணவனும் மனைவியும்
இணைந்து செல்லலாம் . இது இருவரும் விரும்பிச் செல்வதாக இருக்க வேண்டும் ; அதுவும் அவரவர்
எல்லையை அங்கீகரித்துச் செல்வதாக இருக்க வேண்டும் .கட்டாயப்படுத்தியோ அடம்பிடித்தோ
இழுத்துச் செல்வது முரண்பாட்டைத்தான் உருவாக்கும் .
[ கோயிலுக்கு
மனைவியை அழைத்துச் சென்று ; அவர் வழிபட்டு வரும் வரை கோயில் வாசலிலேயே காத்திருந்து
கூட்டிவரும் பகுத்தறிவாளர்கள் உண்டு ; அது குடும்ப ஜனநாயகத்தை மதிக்கும் பெருந்தன்மை
. ஆனால் இதனை பயன்படுத்தி அவர் கொள்கைக்கு ஊறு செய்யும் விதத்தில் நடந்து கொள்வது சரியாக
இருக்காது . அவரவர் கருத்தின் வழி அவரவர் சுதந்திரமாகச் செயல்படுவதே நன்று. இதற்காக
ஒவ்வொருவரும் வீட்டிற்குள் கடும் கருத்துப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. ]
ஒத்த கருத்து
எனச் சொல்லி தலையாட்டிப் பொம்மைகளாக வாழ்வதைவிட ; மாறுபட்ட கருத்தோடு ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு இணைந்து வாழ்வதே உயர்ந்த காதலாகும் .
இன்னும் சில
கேள்விகள் இருக்கு. பின்னர் …
சுபொஅ.
12 /01
/26 .
0 comments :
Post a Comment