முகநூல் வில்லங்கம்.

Posted by அகத்தீ Labels:

 



முகநூல் வில்லங்கம்.

 

முகநூல் எனப் பெயர் வைத்தது ஏன் எனத் தெரியாது .

ஆனால்

பலரின் உண்மை முகம் அங்கேதான் பல்லிழிக்கிறது.

 

முதலில்

முகமூடியோடுதான் நுழைகிறார்கள்

 

மெல்ல மெல்ல முகமூடி

கழன்றுவிழ அம்மணமாய் காட்சி தருகிறார்கள் .

 

அவர்கள்

மென்மையாகப் பேசுகிறார்களா

வன்மையாகப் பேசுகிறார்களா என்பதைவிட

எதற்காகப் பேசுகிறார்கள் என்பதே முக்கியம் .

 

அவர்கள்

சாக்கடையை வீசுவதும்

சாதுரியமாய் பேசுவதும்

நம்பவைத்து கழுத்தறுக்கத்தான் .

 

வெட்ட வெட்ட

வேறுவேறு பெயர்களோடு

அவர்கள்

வில்லங்கம் செய்கிறார்கள்

 

அவர்களின்

கண்ணீருக்கும் சிரிப்புக்கும்  

கோபத்துக்கும் ஆமாம்சாமிக்கும்

பின்னால் ஓர் அரசியல் ஒளிந்தே இருக்கிறது.

 

இதனை

அறியாதவரை

நீ அரசியலில் ஏமாளியே !

 

என்ன செய்வது?

இவர்களுக்கு மத்தியில்

நீ களமாடித்தான் ஆகவேண்டும்

அது உன் சாமர்த்தியம் !!

 


 

சுபொஅ.

02 /01 /26.


0 comments :

Post a Comment