நேற்று இனிப்பு
காரம் பஜ்ஜி வடை எல்லாம் சாப்பிட்டதால் இன்னும் சோம்பேறித்தனம் தொற்றிக்கொண்டிருக்கிறது
. ஊரெங்கும் பட்டாசு வெடிப்பதால் நடை பயிற்சி
யும் இல்லை
. காலை உணவு முடிந்ததுமே கண்ணை மூடி சாய்ந்துவிட்டேன் .
வருணன் ,
வாயு , பூமாதேவி மூவரும் கனவில் வந்தனர் .
“ மிஸ்டர் ! எனக்கொரு நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்து
கொடுங்கள் ..” என என்னை உசுப்பினார்கள் .
“ நல்ல வழக்கறிஞர்ன்னா
யாருன்னு புரியலையே ? கட்சி வழக்கறிஞர்கள்
இருக்கின்றனர் , நீதியை விலைக்கு வாங்கித் தரும் வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , மத
வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , சாதி வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , விலை போகும் வழக்கறிஞர்கள்
இருக்கின்றனர் , நல்ல நீதிபதிகளோ நிதி மன்றமோ எங்கே இருக்கு ? நீங்க நல்ல வழக்கறிஞரைக்
கேட்கிறீங்க…”
“ மிஸ்டர்
! தூக்கத்திலகூட இப்படித்தான் பேசுவீங்களா ? ஏற்பாடு செய்ய முடியுமா ? முடியாதா ?”
“ நல்ல …
நல்ல … உங்க கேசு என்னண்ணு முதல்ல சொல்லுங்க … அப்புறம் .. நல்ல…”
“ சரி ! சரி
! விஷயத்துக்கு வர்றோம்… நான் வருணன் மழை சுத்தமாகத்தான் பெஞ்சுகிட்டு இருந்தேன் .
இப்போ ஊரை நாசமாக்கி என்னை அமில மழை பெய்ய வச்சிட்டாங்க … நான் பெய்ற கொஞ்ச நஞ்ச மழை
நீரு தேங்குற குளம் ,குட்டை ,கம்மாய் .சமுத்திரம் எங்கும் புள்ளையாரை தூக்கிப் போட்டு
என் சுத்தத்தை நாசமாக்குறாங்க … நாங்க விநாயகரைக்
கேட்டோம் … நான் அப்படிச் செய்யச் சொல்லலைன்னு சத்தியம் பண்றார்… மனுஷங்கதான் இதுக்கு
காரணம் அவங்க மேல வழக்குப் போடணும் …”
“ உங்க கேசு
!”
“ நான் வாயு
! சுத்தமான காற்றாக வீசி உயிர்களை வாழவைத்தேன் … இப்போ நான் மாசுபட்டுட்டேன் … நாம்
மகாவிஷ்ணுவைக் கேட்டேன் ஊரெங்கும் பட்டாசு
வெடிக்க நீங்கதான் சொன்னீங்களான்னு … அவரு சொல்றாரு எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை
எல்லாம் இந்த மனுஷாள் பண்ற அட்டகாசம் … அவாளத்தான் தண்டிக்கணும்…”
“ நீங்க
! சொல்லுங்க…”
“ நான் பூமாதேவி
… நான் எல்லா உயிரும் வாழ இடம் தந்தேன் … தீபாவளி ,ஆயுத பூஜை , விநாயகர் சதுர்த்தின்னு
என்னைக் குப்பைக்காடாக்கிறாங்க .. நானும் எல்லா சாமிகிட்டேயும் கேட்டுட்டேன் … சத்தியமா
நாங்க சொல்லவே இல்லைன்னு தலையில் அடிச்சு சத்தியம் பண்றாங்க … மனுஷங்கதான் குற்றவாளி
அவங்க மேல வழக்குப் போடணும் …”
“ உங்க மூணு
பேருக்கும் வருணன் ,வாயு ,பூமாதேவி மூவருக்கும் மனுஷங்கதான் எதிரியா ?”
“ ஆமாம்…ஆமாம்…”
“ உச்சி மன்றம்
போனா மனுஷாள இல்லாத பேய் பூதம்தான் விசாரிக்குன்னு சொல்லிருவாங்களே…”
“ அப்படியா
?”
“ சரி !சரி ! அவங்க வெளிநாட்டுக்காரங்களா..”
“ இல்லை
… இல்லை…”
“ இவங்களா ?”
“இல்லை…”
“ அவங்களா
?”
“ இல்லை
…”
“ எந்த நாட்டுக்
காரங்க … எந்த ஊரு காரங்க … என்ன மதம் … என்ன
சாதி…”
காதைக்கொடு
ரகசியமாகச் சொல்றேன் .சத்தமாச் சொன்னால் தேசவிரோதின்னு சொல்லி ஜெயில்ல போட்டிருவாங்க
…”
[ காதில்
மூவரும் கிசிகிசுத்தனர்…]
“ஐயையோ …. ஐயையோ …. வாயு .வருணன் ,வாயு ,பூமாதேவி
மூவரும் இந்து விரோதியாகிட்டீங்க….” நான் அலற….
[ மூவரும்
தலைதெறிக்க ஓடினார்கள் ]
தூக்கம் கலைந்தது
.
சுபொஅ.
21/10/25.
“
0 comments :
Post a Comment