நேற்று ஓர்
பழைய நண்பன் . அலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்துச் சொன்னான் . ’நன்றி ! உங்களுக்கும்
வாழ்த்துகள்’ என்றேன் . கொஞ்சம் கடந்த காலத்தை அசை போட்டோம் . அப்போதே நாங்கள் எதிர்
எதிர் முகாம்தான் . இப்போது தான் மாறிவிட்டதாகச் சொன்னான் .
“ மார்க்சின்
பொருளாதாரமும் அரசியலும் தேவை . அப்போதுதான் உலகம் தப்பிப் பிழைக்கும் .” என்றான்
. நான் எழுதிய
‘மார்க்சியம் என்றால் என்ன ?” நூலை வாசித்துவிட்டதாகச் சொன்னான்...
அடடா ! அடடா
! மாற்றம் ரொம்பத் தெரியுதே என மலைத்துப் போனேன் .
ஆனால் , அவன்
அடுத்து சொன்னதும் நான் அவசரப்பட்டது புரிந்தது .
“ ஆனால் மார்க்சிய
தத்துவம் தனிமனித வாழ்க்கையை வறட்டு சூத்திரமாக்கிவிடும் .அர்த்தமுள்ளதாக்க இந்து ஆன்மீகமே
ஆத்ம விடுதலை தரும். நீரிஸ்வர வாதமும் அதாவது கடவுள் மறுப்பும் இந்துமதத்தின் ஒரு கூறுதான்.ஆனால்...”
என நீட்டி முழக்கினான் . செவிமடுத்த பின் , மீண்டும் வாழ்த்து சொல்லிவிட்டு …..
நான் சொன்னேன்
, “ நண்பா ! ஒண்ணு ’இட்லி சட்னி சாம்பார் / பரோட்டா சால்னா சாப்பிடு’ இல்லை எனில்
’கோமியம் குடி’ . நீ சொல்லும் ‘கோமிய இட்லி /பரோட்டா கோமியம்’ சாத்தியமில்லை
…”
நாளை
பேசுவோம் என உரையாடலைத் துண்டித்துவிட்டான்.
இனியும் பேசுவோம்...
நான் இரவு
முழுவதும் அந்த உரையாடலையே அசை போட்டேன் . தனிமனித வாழ்க்கைக்கும் மார்க்சிய தத்துவத்துக்கும்
இடையிலான உயிரோட்டத்தை நாம் ஏன் எடுத்துச் சொல்லக் கூடாது .
வாழ்வின்
அனுபவங்களோடும் பிரச்சனைகளோடும் மார்க்சிய தத்துவ வழிகாட்டலை பொருத்தி சொன்னால் என்ன
?
அது ஓர் தேவைதான்
,ஆயின் நுட்பமாக வாழ்வையும் மார்க்சியத்தையும் பேச வேண்டும் . கடும் பணிதான் . முயன்றால்
முடியாததில்லை. செய்வோம் . பொறுமையாக … ’மார்க்சியம் என்றால் என்ன ?” நூலில் போகிற
போக்கில் இதைச் செய்திருப்பேன் … ஆனால் ’வாழ்வியல் தத்துவம் மார்க்சியம்’ என தனித்தே
முயற்சி செய்ய வேண்டும்தான்…
சுபொஅ.
19/10/25.
0 comments :
Post a Comment