ஒவ்வொரு மரணச்
செய்தியும்
ஏதோ ஒன்றைச் சொல்லிச்
செல்கிறது .
நண்பர்கள் தோழர்கள்
வட்டம்
விரிந்துகொண்டே
சென்ற காலம் ஒன்று இருந்தது
தோளில் கைபோட்டபடி
அளவளாவிய கதைகளின்
எண்ணிக்கையை சொல்லி
முடியாத காலம் அது.
அப்போதும் இதயத்தை
பகிர்ந்து கொண்டவர்கள் சொற்பமே
ஒவ்வொருவராய் அவர்களும்
விடைபெற
அடுத்து யார் எனும்
கேள்வியோடு
தூங்கச் செல்லும் முதுமையின் துயரத்தை
கவிதையில் சொல்லிவிட
முடியாது !
சுபொஅ.
0 comments :
Post a Comment