“மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் ஒற்றுமையும் முரண்பாடும்”
என்கிற நூலை மூத்த தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கிறார் . ஏற்கனவே இம்மூவரின்
வாழ்க்கை வரலாற்றை நயம்பட எழுதியவர் . மூவர் மீது மிகுந்த மரியாதையும் ஆழந்த ஈடுபாடும்
கொண்ட ராமகிருஷ்ணன் காய்தல் உவத்தலின்றி அலுசும் இயல்பினர் .
இந்நூலில் மூவரின்
வாழ்வையும் பங்களிப்பையும் தனித்தனியே சுருக்கமாகத் தொகுத்தளித்துவிட்டு ;இன்றைக்கு
மூவரின் தேவையும் வலியுறுத்துகிறார் .
தற்போது ஒருவருக்கு
எதிராக ஒருவரை நிறுத்தும் - குறுக்குசால் ஓட்டும் பேர்வழிகள் மிகுந்துவிட்டனர் . இவர்களின்
நோக்கமும் செயலும் இறுதியில் பாசிச சக்திகளுக்கு உதவும் .ஆகவே மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர்
மூவரையும் ஆயுதமாக்க வேண்டிய காலத்தின் கட்டளையை இந்நூல் பேசுகிறது .அத்துடன் கம்யூனிஸ்ட்
இயக்கம் நடத்திய சமூகப் போராட்டங்களின் வரலாற்று குறிப்புகளை பட்டியலிடுகிறது.
“மார்கஸ் – பெரியார்
–அம்பேத்கர் ஆகிய மூவரின் கருத்துகளையும் ஒப்பீடு செய்யும்பொழுது உலகம் முழுவதும் அடிப்படையான
சமுதாய மாற்றத்திற்காக நிற்கும் மார்க்சியமும் ,பெரியாரின் கடவுள் மறுப்பு கண்ணோட்டமும்
,சுயமரியாதையும் ,அதேபோன்று அம்பேத்கரின் சமூகநீதி என்ற லட்சியமும் இணைந்து இந்தியாவின்
அவசர அவசியத் தேவை என்பது மட்டுமல்ல .அது காலத்தின் கட்டாயமும் ஆகும் .” என்கிறார்
நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் .
களத்தில் நிற்கும்
தோழர்கள் வாசிக்க வேண்டிய நூல் .மேலும் மேலும் இவர்களைப் பற்றி அறிய மேலும் மேலும்
வாசிக்கத் தூண்டும் நூலும்கூட .அந்தத் தேடலே இன்றையத் தேவையாகும்.
நூல் தேவைக்கு
தொடர்பு கொள்க : 9486927364 ,044 24356935
/ 24332924.
0 comments :
Post a Comment