எங்கே போகிறாய் ? எங்கே போகிறாய் ?
மனிதா ! மனிதா ! நீ - எங்கே போகிறாய் ?
[எங்கே..]
வெறுப்பை விதைக்கிறாய் வினையை அறுக்கிறாய்
பொறுப்பை மறக்கிறாய் பொல்லாங்கு நினைக்கிறாய்
அடுப்பை அணைக்கிறாய் வீட்டை எரிக்கிறாய்
மனிதம் சிதைக்கிறாய் மதத்தில் புதைகிறாய்
[எங்கே..]
விரல்நுனியில் உலகம் விஞ்ஞானத்தில் உயர்ந்தாய்
விரல்நுனியால் விஷத்தை அமுதசுரபியில் கலந்தாய்
கலகவிதையை கணினி மூலமும் விதைத்தாய்
பொய்யையை நம்பிநம்பி மானுடத்தை தொலைத்தாய்
[எங்கே,,,]
தலைக்குமேலே வெள்ளம் சிக்கிநீயும் தவித்தாய்
தப்பவழி தெரியாமலே சங்கடத்தில் முழித்தாய்
காப்பாற்ற சாமிகீமிவரலை நெஞ்சுடைந்து நின்றாய்
தோழமையின் போர்முரசை வெகுதொலைவில் கேட்டாய் !
[ எங்கே…]
சுபொஅ.
4/10/2021.
0 comments :
Post a Comment