தேங்கி நாறுகிறது குட்டை
தேங்கி
நாறுகிறது குட்டை
நாற்றம்
குடலைப் புரட்டுகிறது
ஈக்களும்
கொசுக்களும் மொய்க்கின்றன
தவளைகளும்
மீன்களும் உரத்தகுரலெடுத்து
ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுகின்றன
குட்டையின்
கரையில் கால்நனைத்து நிற்கிறேன்
நாற்றமும்
கூச்சலும் மரத்துப்போயின
பெரிய ஏரி நீர்வரத்து மிகுந்த
ஏரி பாசன பரப்பு மிகுந்த
ஏரி
பராமரிப்பின்மையால்
நீர்வரத்து நின்று
ஊற்றுகள்
தூர்ந்து மலடாகிவிட்டன
இனி
கடும் வறட்சி காவு கொள்ளும்
இல்லையேல்
பெருவெள்ளம்
உயிர்ப்பிக்கும்.
தேங்கி
நாறுகிறது குட்டை.
சுபொஅ.
0 comments :
Post a Comment