நிம்மி மோதி நிம்மி மோதி

Posted by அகத்தீ Labels:

 


நிம்மி மோதி நிம்மி மோதிநிம்மி மோதி நிம்மி மோதி

நிம்மி மோதி நிம்மி மோதி

வாயில சுட்ட வடை நூறு

திண்ணு பாத்தது யாரு...


                                                (நிம்மி...)


காற்றுல கணக்கெழுதி

கல்லா கட்டுவேன்... நான் 

கல்லா கட்டுவேன்...


கஞ்சிப் பானையை கவுத்து வசிச்சி

சோறு பொங்குவேன்..... நான்

சோறு பொங்குவேன்

                                          (நிம்மி)

வீட்டு  உறி நெய்யை ஊரானுக்கு ஊற்றிக் கொடுப்பேன் - நான்

ஊற்றிக் கொடுப்பேன்


பசிச்சழும் குழந்தையை 

போட்டு மிதிப்பேன் - நான்

பொண்டாட்டியையும் சேர்த்து மிதிப்பேன்

                                   (நிம்மி)

விதை நெல்ல மூட்ட கட்டி 

விற்றுத் திம்பேன் - நான்

விற்றுத் திம்பேன்...

                                     

உத்திரத்தை உருவி அடுப்பெரிப்பேன்

ரத்தக் காட்டேரிக்கு விருந்து வைப்பேன்

நான் விருந்து வைப்பேன்

                                               (    நிம்மி) 

திரிசங்கு சொர்க்கதில உங்களுக்கு

வீடு கட்டித் தருவேன் - நான்

வீடு கட்டித் தருவேன்...


 குடியிருக்கும் பூமியசும்மா 

தூக்கித் தருவேன் அம்பானிக்கு /அதானிக்கு

தூக்கித் தருவேன்...


                      (   நிம்மி) 


                                            சுபொஅ.

0 comments :

Post a Comment