நரபலி வழக்கத்தில்
இல்லையாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
**************************************************
நேற்றின் சுவடுகளைப்
புதைத்து எழுகிறது
இன்றின் பிரமாண்டம்
கொண்டாட்டம் குதூகலம்
சூழ்ந்திருக்கும் வேளையில்
ஓர் முலையில் அழுகுரல்
நெருங்க நெருங்க
பல்கிப் பெருகுகிறது
நரபலி வழக்கத்தில்
இல்லை என்கின்றனர்
வாழ்வுரிமையைப்
பறித்து விரட்டல் நரபலி இல்லையாம் !
ஆம் ! அது ஆன்மீக
முத்தமாயிருக்குமோ ?
சுபொஅ.
0 comments :
Post a Comment