குடும்பத்திலும் நாட்டிலும்
எப்போதும்
தலைவர் சர்வாதிகாரியாகவே
இருக்கிறார்
கடினமாகவோ மென்மையாகவோ!
நிரந்தர இரண்டாமிடத்தவர்
புழுங்கிக் கொண்டே
இருக்கிறார்
கூடுதலாகவோ குறைவாகவோ!
மூத்த குடிமக்கள்
புறக்கணிப்பதாய்
புலம்பித்தீர்க்கிறார்கள்
பகீரங்கமாகவோ மனதிற்குள்ளோ
!
இளையதலைமுறை
கோபத்தோடேதான்
மோதுகிறார்கள்
மூத்தோர் வழிவிடவில்லை
என்றே !
குழந்தைகளைக்
கொண்டாடுவதாய்
பேசிக்கொண்டே
கூண்டுக்கிளி ஆக்கவே
முயல்கிறார்கள் !
பாசம் வேஷம் நீதி
அநீதி
விசுவாசம் துரோகம்
லாபம் நட்டம்
ஏற்றம் இறக்கம்
நட்பு பகை
குடும்பத்திலும்
நாட்டிலும்
எல்லாம் இப்படித்தான்
ஜனநாயகம் பேச்சோடுதான்!
போராடித்தான்
எங்கும் எல்லோரும்
மூச்சுவிட முடிகிறது
!
சுபொஅ.
0 comments :
Post a Comment