பலப்பல வண்ணங்களில்
Posted by
பலப்பல வண்ணங்களில்
பூக்கள் சிரித்தன
வண்ணத்துப்பூச்சிகள்
சிறடித்தன
பூங்கா நடுவே குட்டிபிசாசுகள்
ஆடி , ஓடி , ஏறிக்
குதித்து விளையாடின
கூச்சல், மகிழ்ச்சி,
கலகலப்பு
அங்கே ஐம்பது குட்டிப்
பிசாசுகள்
ஆனால் ஒருப்போல்
இல்லை
ஆண் ,பெண் ,கறுப்பு
,சிவப்பு ,மாநிறம்
சுரண்ட முடி ,
செம்பட்டைத் தலை ,
ஒழுகின மூக்கு
, திக்குவாய் , சூம்பிய கால்
குட்டிப்பிசாசுகள்
காய்விட்டன , பழம்விட்டன
எல்லாம் நொடிக்கு
நொடி மாறின
ஒரு போதும் வெறுக்கவில்லை
அங்கே ஓர் மனித
சங்கி வந்தார்
“ நீ ஓரம் உட்கார் ! நீ அவனோடு சேராதே !
அவன் உனக்கு சமம்
அல்ல ! நீ மட்டுமே மேலானவன் !”
குட்டிப் பிசாசுகளைக்
கூறுப்போட்டார்.
வெற்றிக் களிப்புடன்
வாசலைத் திறந்தார்
ஒற்றைக் காலை வெளியே
வைத்தார்
குட்டிப் பிசாசுகள்
ஒன்றாய்ச் சேர்ந்து
குலவையிட்டன
.. கும்மாளமிட்டன
மனிதனைவிட பிசாசுகள்
மேல் !!!
சுபொஅ.
[ இது ஓர் உண்மை
நிகழ்வுசார் புனைவு ]
0 comments :
Post a Comment