உளியோடு ஓர் உரையாடல்.

Posted by அகத்தீ Labels:

சு.பொ.அகத்தியலிங்கம்.

மகாபலிபுரம் கடற்கரை சூரியனின் பொற் கதிர்கள் குளிப்பாட்டும் அதிகாலை வேளை கையில் உளியோடும் சுத்தியலோடும் கருங்கல்லில் தாளலயத்தோடு ஆத்மார்த்தமாகப் பேசத்தொடங்கினான் சிற்பி.

எத்தனை முருகன், பிள்ளையார், ராமன், லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன், மேரிமாதா, யேசு என் வியர்வையில் உதித்தெழுந்தார்கள்; ஆனால் ஒருவரும் என் குரலுக்கு செவிசாய்க்கவில்லையே?

ஆற்றாமை பெருமூச்சாய் வெளிப்பட குதப்பிய வெற்றிலைச் சாறை துப்பிய வாறே ‘என் கடமை சிலை வடித்துக் கொடுப்பதேஎன் பணியில் மூழ்கினான்

இன்னும் இரண்டு நாளில் அந்த சிவனை செய்து முடித்தாக வேண்டும்.

அவன் கவனம் முழுவதும் சிலையில் ஒருமுனைப்பட்டது. அலைபாயும் மனதோடு சிலை வடித்தால் நுட்பமும் எழிலும் கொஞ்சாது.

மனதை ஒரு முகப்படுத்து என்கிறாரே; அதற்குதியானமேஓரே உபாயம் என்கின்றாரே ! சிலை வடிக்கும் போது அதில் உள்ளமும் உடலும் ஒன்றி தாள லயத்தோடு உளியை நர்த்தனமிடச் செய்வதைவிட உயர்ந்த தியானம் வேறு எங்கு இருக்கும்?

நாதஸ்வரம் வாசிப்பவது, தவிலடிப்பது, பறை இசைப்பது, உழுவது, மீன் பிடிப்பது என உழைப்போடு வாழும் ஒவ்வொவ்வொன்றும் உன்னத தியானம்தானே!

ஒரு வேளை உழைப்புக்கு கிஞ்சிற்றும் தொடர்பற்றதிண்ணை வேதாந்திகளின் தேவையில் முகிழ்த்ததாய் இருக்குமோ தியானம்?

சிற்பியின் உளியில் ருத்திரதாண்டவம் சிவன் உயிர்த்தெழுந்து கொண்டிருந்தார்.

வழக்கமாய் கடவுள் சிலைகள் கோவிலுக்கே செய்யப்படும். வித்தியாசமாய் இந்த சிலையை ஒருவர் தன் வரவேற்பு அறையில் வைக்கக் கேட்டிருக்கிறார்.

பார்க்கிறவர் வாயெல்லாம் சிற்பியின் கைவண்ணம் பேசவேண்டும்; அடங்காப் பேராசையோடு சிலையோடு ஒன்றி சினம் பொங்கும் முகம், பார்வையில் சீற்றம், தசைகளின் முறுக்கு, சத்திய ஆவேசத்தின் வெளிப்பாடு, அதிரும் உடுக்கை என ஒவ்வொன்றையும் ரசித்து சுவைத்து உயிர் கொடுத்தான் சிற்பி.

திடீரென வானில் இடியும் மின்னலும். சிற்பியின் கவனம் இயற்கையால் சிதறியது.

முகத்தில் அரும்பிய வியர்வையை துடைத்த படி உளியை, சுத்தியை சிலையில் அடியில் வைத்துவிட்டு வானத்தைப் பார்த்தான். சொம்பை எடுத்து தண்ணீரால் வாயைக் கொப்பளித்தான். தண்ணீர் குடித்தான்.

அருகே கிடந்த ஒரு கல் மீது உட்கார்ந்து சற்று கண்ணயர்ந்தான்.

உளி அவனோடு பேசத் தொடங்கியது.

சிற்பியே! உன் வயது என்ன?”

உளியே! உனக்குத் தெரியாதா? என் நினைவு தெரிந்த நாளில் இருந்து தந்தையோடு உன் பட்டறையில்தானே வாசம் செய்கிறேன்..”

சிற்பியே! கேள்விக்கு மட்டும் பதில் சொல்..”

உளியே! சரியாய்ச் சொல்ல நான் என்ன ராமரா பிறந்த தேதி, இடம், நாள் எல்லாம் விவரமாய் பதிந்து வைத்து வில்லங்கம் செய்ய…? சுமார் எண்பது இருக்கலாம்சுதந்திரத்துக்கு முன்னாலேயே பிறந்தவன்வெள்ளையனே வெளியேறுன்னு காந்தி போராடினப்போ நான் பொறந்தேன்னு அப்பா சொன்னாரு …”

சிற்பியே! உன் உயிரோடும் உணர்வோடும் கலந்தவன் நான்.. இருக்கட்டும்நீ! கோவில் கோவிலாய் சுற்றி நாள் கணக்காய் ஒவ்வொரு கோவிலிலும் தங்கியது நினைவிருக்கா?”

சிற்பி சிலிர்த்தான். பழைய நினைவுகளில் மூழ்கி பேசத் தொடங்கினான்

அடடா! அடடா! அற்புதம்!அற்புதம்! கோவில்தோறும் ஒவ்வொரு சிலையாய் சிற்பமாய் அணு அணுவாய் ரசித்தேன். நான் மட்டுமா கோவிலுக்கு வருவோரெல்லாம் சிற்பத்தின் பேரழகில், ஓவியத்தின் எழிலில், நாடி நரம்பை மீட்டும் மத்தளம், வரிசங்கம் என ஒவ்வொன்றின் இசையில், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் என தமிழின் மகுடி வாசிப்பில் கிறங்கிக் கிடப்போம்.. கோவில் என்பது கலையின் பெட்டகம், பாசறை. பயிற்சிப் பள்ளி அவை எல்லாம் வெறும் பழங்கனவாய்ப் போனதே….”

ஏன்? இப்போது கோவில் அப்படி இல்லையா?”

உளியே! என் வயிற்றெரிச்சலைக் கிளறாதே! இப்போது எந்தக் கோவிலுக்கும் போய்ப் பார் எங்கும் கயிறு கட்டி பெரிய கியூ நிற்கும்.. புரியாத சமஸ்கிருதத்தில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பர்.. நகரு நகரு என எல்லோரையும் விரட்டிக் கொண்டிருப்பர்சிலையை, சிற்பத்தை ஓவியத்தை ரசிப்பாரில்லை.. இசைத் தமிழ் நான் செய்த அருங்காவியம் என்றானேஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன் -தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்றெல்லாம் இருந்த கோவில்இப்போது  சடங்கு, சம்பிரதாயம், சமஸ்கிருதம் என சிக்கி சீரழிகிறதே …”

சிற்பி! சிற்பி!” என உளி கூப்பிட்டதுகூட காதில் விழாமல் சிற்பி அரற்றினார்.

தமிழர் கலை கொஞ்சும் கோவில் இப்போது வியாபாரமும் மூடநம்பிக்கையும் மலிந்த சந்தையாகிவிட்டதே …… என் போன்ற சிற்பி உயிர் கலந்து படைத்த சிலை கருவறையில் எண்ணை பிசுக்கோடும் தூநாற்றத்தோடும் இருக்க அதன் அழகை எழிலை மக்கள் எட்டா தொலை வாக்கி ரசணையற்ற சடங்கின் பலிபீடம் ஆக்கிவிட்டார்களே !”

சிற்பி! அவர்கள் மந்திரம் போட்டு சிலைக்கு தெய்வீக சக்தி கொடுத்தார்களாம்…”

உளியே ! அவர்கள் ஏன் மந்திரம் போட்டு கோவிலை எழுப்பி இருக்கக் கூடாது! மந்திரம் போட்டு சிலையை பெற்றிருக்கக் கூடாதுஉழைப்பைதிறமையை அவர்கள் ஒரு போதும் மதிப்பதில்லைபோலிகள்பொய்யர்கள் …”

உளி ஓங்காரமாய் சிரித்தது. சிற்பி திடுக்கிட்டு விழித்தார் .

எல்லோரும் ரசிக்கும் இடத்தில் அமரபோகும் என் சிலைக்கு உயிர் கொடுப்பேன் என உளியை சுத்தியை கையில் எடுத்தார்

உளி மெல்லச் சொன்னது, “வேண்டாதவற்றை நான் செதுக்கித் தள்ளத்தள்ளத் தானே சிலை உயிர் பெறும்இந்த அனுபவத்தை படி! செய்!...”

உளியின் வார்த்தைகளை அசை போட்டபடியே சிலையை மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சிற்பி. ஒரு எரிமலை கருக்கொள்ளத் துவங்கியது.

நன்றி : தீக்கதிர் ,வண்ணக்கதிர் , 12 மே 2019.

0 comments :

Post a Comment