//
போட்டியில்
வென்றும் முருகனுக்கு கனி
மறுக்கப்பட்டது ;
போட்டியே
கர்ணனுக்கு மறுக்கப்பட்டது
; இதுதானே
தரம் தகுதியின் லட்சணம் ?//
அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் !!!
சு .பொ
. அகத்தியலிங்கம்.
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
பாபம்
,புண்ணியம் ,பவித்திரம்
,சாதாரணம் , தர்மம்
,அதர்மம் , வார்த்தை
விளையாட்டுகளை நிறுத்துங்கள்
!
அறம் ,
விழுமியம் , தகுதி
,திறமை , நீதி
,நேர்மை சொற்சிலம்பங்கள்
இனியும் வேண்டாம் விட்டொழியுங்கள்
!
வில்லுக்கு
விஜயன் , சொல்லுக்கு
அகத்தியன் என இன்னும் எத்தனை
நாள் பொய் பித்தலாட்டம்
செய்யப்போகிறீர்கள் ?
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
ஏகலைவனோடு
எந்தப் போட்டியில் அர்ச்சுனன்
ஜெயித்தான் ? கட்டை
விரலை காணிக்கை கேட்டதாலன்றோ
பிழைத்தான் ?
கர்னனின்
குலம் கோத்திரம் கேட்டு
போட்டியை தவிர்த்ததாலன்றோ
அர்ச்சுனனன் போட்டியின்றி
ஜெயித்தான் ?
கர்ணனின்
கவச குண்டலத்தை யாசித்துப்
பெற்றும் ; குந்தி
மூலம் நிபந்தனைகள் விதித்தும்தானே
போர்க்களத்திலும் வென்றான்
?
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
கர்ணனின்
புண்ணியங்களையும் பார்ப்பானாய்
வேஷமிட்டுப் போய் தானம்
பெற்றுத்தானே கர்ணனை கொன்றான்
கிருஷ்ணன் ?
பஞ்சபாண்டவரும்
பாண்டுவின் இரத்த வாரிசுகளா
? குந்தியும்
மாத்திரியும் சுதந்திர உறவில்
பெற்ற பிள்ளைகளுக்கு எது
உரிமை ?
குந்தி
பெற்ற தர்மன் ,அர்ச்சுனன்
,பீமன் பெறும் உரிமை
,சலுகை கர்ணனுக்கு
ஏன் மறுக்கப்பட்டது ?
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
போட்டியில்
வென்றும் முருகனுக்கு கனி
மறுக்கப்பட்டது ; போட்டியே
கர்ணனுக்கு மறுக்கப்பட்டது
; இதுதானே தரம்
தகுதியின் லட்சணம் ?
மூன்றடி
என்பது மகாபலிக்கு மட்டும்
எல்லையற்று நீண்டதும் ;
கொன்றதும் தானே உங்கள்
தர்மத்தின் அளவுகோல் ?
வேதம்
படித்த தொல்குடி மகன் சம்புகன்
தலையைக் கொய்தவன்தானே உங்கள்
மகாபுருஷன் ராமச்சந்திர
பிரபு ?
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
எள்ளுப்பாட்டியும்
கொள்ளுப்பாட்டியும் இடுப்புவலியால்
துடித்தபோது ஓடிவந்தது
நாசுவத்திதானே ?
அவள்
வராவிடில் சந்ததி ஏது ?
சமஸ்கிருதம் தெரியாதென
அவள் மருத்துவம் படிக்க தடை
போட்டது யார் ?
அந்த தடையை
உடைத்ததும் ; அவள்
மருத்துவம் படிக்க இடம்
ஒதுக்கியதும் எம் தாடிக்காரன்
போராட்டமல்லவா ?
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
நீங்கள்
எப்போதும் பூணூலால் அளக்கிறீர்கள்
! நாங்களோ எப்போதும்
பனைநாரால் அளக்கிறோம் ;
அதிலென்ன பிழை ?
நீங்கள்
எப்போதும் புராணப்புளுகுகளால்
புன்னகைக்கிறீர்கள் !
நாங்களோ உண்மைக்
கதைகளால் உருகவைக்கிறோம் ;
தவறென்ன ?
நீங்கள்
யாககுண்டத்தில் உணவை துணியை
எரிக்கிறீர்கள் ; நாங்கள்
வியர்வையால் படைத்தளிக்கிறோம்
; எது தேவை ?
ஞானசிகாமணிகளே
! அறிவின் பிதாமகன்களே
! உங்கள் அளவுகோல்களை
உடைத்தெறியுங்கள் ! அறிவை
விசாலாமாக்குங்கள் !
0 comments :
Post a Comment