விளங்குவது எப்போது ?

Posted by அகத்தீ Labels:
விளங்குவது எப்போது ?

- சு.பொ.அகத்தியலிங்கம் .இப்போதெல்லாம்
சொற்களைக் கண்டு பயமாக இருக்கிறது !

 “சுதந்திரம் வந்தால்
சுபிட்சம் வரும்” என்றார்கள்
யாருக்கு என
கேட்க மறந்தோம் ….

இப்போதெல்லாம்
சொற்களைக் கண்டு பயமாக இருக்கிறது !

 “ வளர்ச்சிதான் எங்கள்
தாரக மந்திரம்” என்றார்கள்
யாருக்கு என
கேட்காமல்விட்டோம் ….

இப்போதெல்லாம்
சொற்களைக் கண்டு பயமாக இருக்கிறது !

“ நமது பாரம்பரியம்
பண்பாடு” என திருவாய் மலர்ந்தனர்
எதற்கென கேட்காமல்
வாய்பிளந்தோம் ….

இப்போதெல்லாம்
சொற்களைக் கண்டு பயமாக இருக்கிறது !

  “ மாற்றம் கொணர்வோம்”
என மார்தட்டினார்கள்
திசைவழி எதுவென
கேட்கத் தவறினோம் ….

இப்போதெல்லாம்
சொற்களைக் கண்டு பயமாக இருக்கிறது !

இனியும்
சொற்களின் மயக்கம்
எங்களுக்கு இல்லை …

யாருக்கு ? எதற்கு ?
ஏன் ? எப்படி? எப்போது ?
இன்னும் பல
கேள்விகள் எம்மிடமுண்டு
சுதந்திரம் என்பதின்
மெய்ப்பொருள் விளங்கும் அப்போது!!!
0 comments :

Post a Comment