கீதையை பொது நூலாகக் கூச ஏற்க இயலாது ஏன் ?

Posted by அகத்தீ Labels:


கீதையை பொது நூலாகக்கூட ஏன் ஏற்க இயலாது?

சு.பொ.அகத்தியலிங்கம்


கீதை யுத்த களத்தில் போதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; மீண்டும் மீண்டும் யுத்தம் செய்யவே அறைகூவல் விடுகிறது. எனவே யுத்தத்தை நியாயப்படுத்தும் நூலை; வன்முறையை நியாயப்படுத்தும் நூலை பொது நூலாக எப்படி ஏற்க முடியும்?
பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என பாஜக அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார். ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் கட்டளைப்படியே அவர் பேசியிருப்பார்.பகவத் கீதை மட்டுமல்ல வேறெந்த மத நூலாயினும் அதனை படிப்பதில் தப்பில்லை. இந்நூல்களை மட்டுமல்ல வேறெந்த நூலையும் தடைசெய்ய வேண்டும் என்பதில் எமக்கு உடன்பாடில்லை. மதநம்பிக்கையில் மூழ்கியவர்கள் அந்த நூலைப் படிப்பது அவர்களின் தனி உரிமை. அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது, கூடாது. அதே சமயம் அந்நூலை எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் ஏற்க வேண்டும் என்று நிர்பந்திப்பதையும் ஏற்க இயலாது. தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

தேசியம் என்பதை இவர்கள் எப்படி வரையறுக்கிறார்கள்? நமது அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? கீதை தொடர்பான கதைகளின் நம்பகத்தன்மை யாது? கீதையை ஏன் எதிர்க்கிறோம்? இப்படிஅடுக்கடுக்காய் கேள்விகள் எழுகின்றன.

முதலாவதாக இந்தியா ஒரு நாடல்ல உபகண்டம். பல மொழி, பல இனம், பலமதம், என வேற்றுமைகள் பல; ஆயினும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இதன் சிறப்பு. எனவேதான் இந்திய அரசியல் சட்டம்இந்திய ஒன்றியம்’ UNION OF INDIA என்றே வரையறை செய்தது. நாட்டால் இந்தியர் எனப்பட்டாலும் மொழியால் தனித்தனி மாநிலங்கள் உருவானது. சங்பரிவார் இந்த பன்மையை மறுதலித்து ஏக இந்தியா என ஒற்றை பண்பாட்டு ஆதிக்க மனோநிலையோடு செயல்படுகிறது. அவர்கள் குறிக்கோளும் அதுவே. “இந்தி - இந்து -இந்தியாஎன்பதே அவர்களின் இலக்கு. அதை நோக்கிகாய் நகர்த்தலின் ஒருபடியே இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பும் பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்பதும்இன்ன பிற மதவெறி முழக்கங்களும். இவை குறித்து பிறகு விரிவாகப்பேசலாம்.

முதலில் பகவத் கீதையை எல்லோருக் கும் பொதுவான நூலென்றாவது சொல்லஇயலுமா? வர்ணாஸ்ரமத்தை பாதுகாக்கும் நூலை - பெண்களை இழிவு செய்யும் நூலை அறிவியலுக்கு பொருந்தா நூலை - வன்முறைக்கு தூபம் போடும் நூலை எப்படி எல்லோரும் ஏற்க முடியும் என்பதே கேள்வி. கீதை குறித்து தத்துவ ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் அலச முடியும். தேவையும் கூட; ஆயினும் கட்டுரையின் எல்லையை இப்போது இங்கே சொன்ன நாலு அம்சத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

கீதை குறித்த புராணப் பொய்மைகளை யும் கிருஷ்ணன் குறித்த ஆபாச புனைவுகளையும் இப்போது நாம் கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறோம். ஏனெனில் ஆய்வாளர்கள் எஸ்.சி. சர்தேசாயும், திலிப் போசும் குறிப்பிடுகிறார்கள், “கீதை எனும் சங்கை யார் ஊதியிருந்தாலும் அவர்தான் கிருஷ்ணன். அந்தப் பாடப் பொருளை அறிவியல் பூர்வமாக ஆய்ந்திட அதுபோது மானதுஇதனை கருத்தில் கொண்டு நேரடியாக விஷயத்துக்கு சென்று விடுவோம்.

சதுர்வர்ணம்மயா சிருஷ்டம்அதாவதுநான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்எனச்சொல்லும் கீதை சாதியத்தை தாங்கிப்பிடிக்கும் நூல் என்பதே நமது முதல் குற்றச்சாட்டு

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நானே நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செய்கையற்றவனும் அழிவற்றவனு மான யானே அவற்றைச் செய்தேன்கீதை 4.13

-இங்கு மேற்கோள் காட்டப்படும் அனைத்து கீதை சுலோகங்களும் பாரதியார் மொழி பெயர்ப்பு

மேலே உள்ள சுலோகத்தை மேற்கோள்காட்டி நாலு வர்ணம் குணம் என்பது சாதி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. மாறாதது இல்லை. ஒவ்வொருவருடைய குணம், செய்கை இவற்றினையொட்டியே அமையும் என்று தற்போது இந்துத்வாவாதிகள் வாதிடுகின்றனர். இது வடிகட்டிய பொய் என்பதை கீதையை முழுதாக ஊன்றிப்படித்தால் உணரலாம்.

பரந்தாமா! பிராமணர், ஷத்திரியர், வைசியர் இவர்களுடைய தொழில்கள் அவரவர் இயல்பில் விளையும் குணங்களின் படியும் வகுப்புற்றனவாம்” (கீதை 18.41)

கீதைக்கு பாஷ்யம் எழுதிய சங்கராச்சாரியார்ப்ரமஹண சத்திரியவிஸாம்என்ற பதத்துடன்சூத்ரஎன்பதைச் சேர்க்காமல் தனித்து நிறுத்தியிருப்பதன் காரணம் சூத்திரனுக்கு துவிஜத்துவம் (பூணூல்)வேதம் படிக்கும் உரிமையும் இல்லாததுதான் என வியாக்கியானம்செய்துள்ளார். அடுத்த சுலோகங்கள் அதை மெய்ப்பிக்கின்றன.

நாலு வர்ணத்துக்கும் தனித்தனியே கடமைகளைத் தீர்மானித்தான் கீதாச்சாரியன். சுலோகம் 18.42ல் பிராமணனுக்கும் 18.43ல் சத்திரியனுக்கும் 18.44 ல் வைசியனுக்கும் தனித்தனியாக கடமைகள் தீர்மானித்த கீதாரியன் 18.45ல் சூத்திரனுக்கு சொன்னது என்ன தெரியுமா? “தொண்டூழியம் புரிதல் சூத்திரனுக்கு அவனியற் கையால் ஏற்பட்ட தொழில்எனக்கூறி ஏனைய நாலு வர்ணத்துக்கும் அடிமையாகவே சூத்திரன் இருக்க வேண்டும் என்கிறது கீதை. அதோடு நிற்கிறதா?

பிறர் குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தாலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச்செய்வதினால் ஒருவன் பாவமடைய மாட்டான்” (கீதை 18.47 )

கேட்டீர்களா கதையை ? ஒரு அருந்ததியன் நன்றாக வேதம் ஓதினாலும் அது நன்றாகாதாம். அவன் மலம் அள்ளு வதை அரைகுறையாய் செய்தாலும் புண்ணியமாம். ஆனால் பிராமணன் தப்பும்தவறுமாக வேதம் ஓதினாலும் புண்ணிய மாம். ஆக அவரவர் குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கீதையை எல்லோரும் எப்படி ஏற்க முடியும் ?

பார்த்தா ! பெண்களோ, வைசியரோ, சூத்திரரோ பாவயோனியில் பிறந்தவர் யாரானாலும் அவர்கள் என்னை வணங்குவர் ஆயின் பரகதி அடைவர்பாரதியார் மொழி பெயர்ப்பில் பெண்களோ என்ற சொல் இல்லை ஆனால் மூலத்தில்ஸ்திரியோ வைஸ்யாய்ததா சூத்ராஎன்ற பதம் உள்ளது. அதாவது பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் அனைவரும் பாபயோனியில் பிறந்தவரென்று சொல்வதை ஏற்க முடியுமா ?
நயத்தகு நாகரிகத்தோடு நெற்றிப்பொட்டில் அறைந்த மாதிரி என் பாட்டாளி வர்க்க கவிஞன் பட்டுக்கோட்டை 1960 லேயே பதில் கொடுத்துள்ளான்;

உயிருக்கெல்லாம் ஒரே பாதை,
ஒரே வாசல்ஒரே கூடு,
ஒரே ஆவிபாரடி கண்ணாத்தா !” [ஆளுக்கொரு வீடு திரைப்படம்]

இனியும் இதற்கு விளக்கம் தேவைப்படுமா ? கீதாசிரியன் பெண்களின் விரோதி அல்லாமல் வேறென்னவாம்.வேதியியல் அறிவியல் சொல்வதென்ன

H2O என்றால் தண்ணீர் . அதற்கு சுவை கிடையாது .ஆனால் கீதையில்ரஸோ ஹமப்ஸூ” (கீதை 7.8) என்கிறார்; அதாவதுதண்ணீரின் சுவையும் நானேஎன்கிறார். இது போல் நிலவின் ஒளி என்றும் கூறுகிறார். நட்சத்திரங்கள் குறித்தும் பரிணாமம் குறித்தும் அறிவியலுக்கு எதிராக கீதை பேசுகிறது. இதனை நாம் கீதையின் குற்றமாகப் பார்க்கவில்லை; மாறாக கீதை புனையப்பட்ட காலத்தின் அறிவியல் வளர்ச்சி அவ்வளவுதான் என்றே பார்க்கிறோம். அதே சமயம் அறிவியல் வளர்ந்துள்ள இந்த யுகத்தில் கீதையை பொதுநூல் என்பதைத்தான் ஏற்க இயலாதென் கிறோம்.

கீதை யுத்த களத்தில் போதிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது; மீண்டும் மீண்டும் யுத்தம் செய்யவே அறைகூவல் விடுகிறது. எனவே யுத்தத்தை நியாயப்படுத்தும் நூலை; வன்முறையை நியாயப்படுத்தும் நூலை பொது நூலாக எப்படி ஏற்க முடியும்? இது தொடர்பாக விரிவாக எழுத இங்கு இடம் போதாது.

அதுபோல் தத்துவ ரீதியாக இந்நூல் குறித்து விமர்சிக்க மேலும் பல பக்கங்கள் வேண்டும். மேலும்விரிவாக அறிய அலைகள் வெளியீடாக 2004 ல் வெளிவந்த - இந்த கட்டுரை ஆசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியகீதை தரும் மயக்கம்எனும் 64 பக்க நூலைப் படிக்கவும்.

ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவர் கோல்வால்கர் கூறுகிறார்,
நமது சமுதாயத்தை மிகவும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் இதரப் பிரதானப் பண்புக் கூறுகள் வர்ண விவஸ்தை (சாதி அமைப்பு முறை) ஆனால் இன்று சாதிய வெறி என்று இழிவு படுத்தப்படுகிறதுஎன்கிறார்.
அதாவது சாதியை தாங்கிப் பிடிக்க வக்கணை பேசுகிறார். இவர்கள்சாதிய சமூக அமைப்பைக் கட்டிக்காக் கவே கீதையை தேசிய நூலாக்கத் துடிக்கிறார்கள் என்பதறிக!

நன்றி : தீக்கதிர் 17-12-2014


0 comments :

Post a Comment