ஞானம்

Posted by அகத்தீ Labels:

ஞானம்


பாராட்டுவது
உதடுகள் மட்டுமே
என்பதறிந்தால்..


அளவுகோல்கள்
விருதுகள் அல்ல
என்பதறிந்தால்..


உனது உயரம்
பதவிகள் அல்ல
என்பதறிந்தால்..


உனது மதிப்பு
வருவாயில் அல்ல
என்பதறிந்தால்..


உனது கால்கள் தடுமாறுவதில்லை
உனது கைகள் நடுங்குவதில்லை
உனது நாக்கு குளறுவதில்லை
உனது இதயம் வருந்துவதில்லை
உனது பயணம் ஓய்வதில்லை

0 comments :

Post a Comment