உயிர்ச் சரடு ……. ….. ……
இயற்கையின் கொடும்
சீற்றங்கள்
கடும் தொற்று நோய்கள்
உயிர் கொல்லும்
பஞ்சங்கள்
கொடுங்கோலரின்
அடக்குமுறைகள்
கொன்றழிக்கும்
யுத்தங்கள்
மத ,இன ,சாதி மூர்க்க
மோதல்கள்
லாபவெறி தலைக்கேறிய
சுரண்டல் பேயாட்சிகள்
மனிதத்தை ,பசுமையை
காவு கேட்கும் மூடச் சுயநலம்
அனைத்தையும் தாண்டித்
தாண்டி பயணிக்கும்
மானுடத்தின் உயிர்ச்
சரடு எது ?
வாழ்வின் மீதான
காதலும் போராட்டமுமே !அன்பெனும்
ஆணிவேரில்தான்
மானுடத்தின் சாதனைகள் அனைத்தும் .
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment