குடிகேடர் ஆட்சி வீழ்க !

Posted by அகத்தீ Labels:
 குடிகேடர் ஆட்சி வீழ்க !

உடுத்தும் உடையால்
உண்ணும் உணவால்
கும்பிடும் சாமியால்
மனிதர்களைக் கூறுபோடும்
குரூரமான பிரதமர்
கொடிய உள்துறை அமைச்சர்..
கேடுகெட்ட அமைச்சர்கள்
நத்திப் பிழைக்கும் அடிமைகள்
நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல
வன்மம் மிக்க காட்டாச்சி .

ஏ ! புயலே !
இந்த அநீதியின் ஆட்சியை
உன் இரக்கமற்றக் கரங்களால்
புரட்டிப்போடு !

ஏ ! சுனாமியே !
உன் பெரும்பசிக்கு
இந்த அக்கிரம ஆட்சியை
விழுங்கி ஏப்பம்விடு !

ஏ! நெருப்பே !
உன் சினம் மிக்க நாவல்
வன்மம் மிக்க ஆட்சியைச் சுட்டெரி !

நாங்கள் இரத்தம் சிந்தி வாங்கிய
இந்தியா இதுவல்ல ..
காந்தியும் ,பகத்சிங்கும் உயிர் தந்த
இந்தியா இதுவல்ல !

அநீதிக்கு தலைவணங்குவதே
தேசபக்தி எனில்
எனக்கு அது தேவையே இல்லை
உங்களுக்கு ??????

சுபொஅ.16/12/
0 comments :

Post a Comment