“ வந்தே மாதரம்” பாடலும் சும்மா ஒரு சவாலும் …

Posted by அகத்தீ Labels:

 


வந்தே மாதரம்பாடலும் சும்மா ஒரு சவாலும்
[ சில வரலாற்றுச் செய்திகளோடு ]

சு.பொ.அகத்தியலிங்கம்.


இந்திய விடுதலைப் போருக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஆர் எஸ் எஸ்பாஜக சங் பரிவார் கூட்டம்வந்தே மாதரம்பாடலின் 150 வது விழாவைக் கொண்டாடி தேசபக்தியைப் பிழிவது வேடிக்கையாக உள்ளது .


சங்கிகளே !

குருமூர்த்தி ,தமிழிசை ,அண்ணாமலை , பாண்டே ,ஹெச் ராசா உள்ளிட்ட மூளைவீங்கி சங்கிகள்தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை முழுவதும் பாட வேண்டும் .கலைஞர் கருணாநிதி ஏதோ பெரிய தப்பு செய்து அப்பாடலை திருத்திவிட்டதாக கூப்பாடு போட்டனர் அல்லவா ? குருமூர்த்தி மேலே ஒரு படி போய் முழுப்பாடலையும் துக்ளக் விழாவில் பாடச் செய்தார் அல்லவா ? அவர்கள் நோக்கம் குரூரமானது . பிறமொழியை தாழ்த்திப் பேசும் வரிகளை சேர்த்துப் பாடினால் அதைக் காரணம் காட்டி அப்பாடலையே ஒழித்துக் கட்டிவிடலாம் என்பதுதான் . பிற மொழி பழிப்பு கூடாது என்றுதான் கலைஞர் அதனை எடிட் செய்து பாடச் செய்திருந்தார் .அவர் செய்தது 100 % சரி ! சரி !சரி ! இதற்கும் வந்தே மாதரம் பாடலுக்கும் என்ன சம்மந்தம் ? முழுதாய் தெரிந்து கொள்ள வேண்டாமா ?


இப்போது சவால் ; ஓன்றல்ல இரண்டு சவால்


1 ] சங்கிகளே 150 வது ஆண்டைக் கொண்டாடும் நீங்கள் அந்தப் பாடல் முழுவதையும் பாடத் தயாரா ? அல்லது அந்தநெடிய பாடலைமுழுமையாக வெளியிடத் தயாரா ?அந்தப் பாடலின் உண்மையான வரலாற்றை உரக்கச் சொல்ல முடியுமா ? இது முதல் சவால் .

2 ] இந்தப் பாடலை எந்த மாணவனும் பாடக்கூடாது என பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை வெளியிட்டதை அறிவீர்களா ? அதை மீற முடிவெடுத்த மாணவர்கள் , “ சுற்றறிக்கையை மீறும் கழகம்என ஒன்றினை 1905 இல் மேற்கு வங்கத்தில் தொடங்கியதையும் அதில் சுசீந்திர பிரசாத் பாபு செயலாளராக இருந்தார் என்பதையும் அறிவீர்களா ? லீஹத் ஹூசைன் என்கிற முஸ்லீம் மாணவர் இதர மாணவர்களைத் திரட்டி தடையை மீறிப் பாடச் செய்தார் என்பதை அறிவீர்களா ? அதுமட்டுமல்ல சித்தரஞ்சன் குகா தாகூர் எனும் மாணவன் தடியடியைத் தாங்கி மயக்கம் அடையும் வரை இப்பாடலைப் பாடினான் என்பதை அறிவீர்களா ? பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை அறிவீர்களா ?

இப்போதுதான் சாவல் கேள்வி ; ஏதேனும் ஒரு ஆர் எஸ் எஸ் காரன் இப்பாடலைப் பாடி அடிவாங்கியதாகவோ சிறை சென்றதாகவோ உங்களால் சொல்ல முடியுமா ? குறைந்த பட்சம்வந்தே மாதரம்என முழக்கமிட்ட ஒரு ஒரு ஆர் எஸ் எஸ் க்காரனைக் காட்ட முடியுமா ?

வரலாற்றுக் குறிப்புகள்


1875 நவம்பர் 7 அன்று வங்க இலக்கிய ஏடானபங்க தர்ஷன்இல் இப்பாடல் முதல் முதல் வெளிவந்தது .1876 ஆம் ஆண்டே துவாரகநாத் கங்கோபாத்யா தொகுத்து வெளியிட்ட தேசபக்தப் பாடல்கள் எனும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றிருந்தது . அதிலும் இப்பாடல் வரிகள் முழுமையாக அல்ல ஒரு பகுதியே இடம் பெற்றிருந்தது அடிக்கோடிட்டு கவனிக்கத்தக்கது .


இப்பாடல் அப்போது பிரபலம் ஆகவில்லை . அதன் பின் 1882 ல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதி வங்க மொழி நாவலானஆனந்த மடத்தில்இப்பாடல் முழுமையாகவும் விரித்தும் எழுதப்பட்ட நெடும்பாடலாக இடம் பெற்ற பின்பே பரவலான கவனத்தைப் பெற்றது . இந்நாவலின் வீச்சும் ஓர் காரணமானது .


1772 – 1775 காலகட்டத்தில் நடைபெற்ற சந்நியாசிகளின் கலவரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் அது .இந்து சந்நியாசிகள் முஸ்லீம் மன்னர்களுக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து பாடிய நெடிய பாடலாகவே அது இடம் பெற்றது . இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான சத்யானந்தா எனும் இளம் இந்து சந்நியாசி தேசத்தை பாரத அன்னையெனும் தெயவமாக உருவகித்துப் பாடும் நெடிய பாடல் இது. கிட்டத்தட்ட காளியை அதாவது துர்க்காவை உருவகித்து பாடியது. அன்றையச் சூழலில் அந்நிய ஆட்சிக்கு எதிரான உணர்வைக் கொம்பு சீவ இந்த நாவலும் பாடலும் பயன் பட்டன என்பது உண்மைதான் .


1896 ஆண்டு இப்பாடலை இரவீந்திரநாத் தாகூர் எடிட் செய்தார் .அப்பாடலில் சில வரிகளை நீக்கியும் சில வரிகளை மட்டும் கோர்த்தும் இன்றைய வடிவத்துக்கு கொண்டுவந்தார் . [ நீராரும் கடலுடுத்த பாடலை கலைஞர் கருணாநிதி எடிட் செய்தது போலவே ]. தாகூரே இசையும் அமைத்தார் .1896 காங்கிரஸ் மாநாட்டில் பாடினார் . அதன் பின்னரே தேசபக்தப் போரில் இப்பாடல் பெரும் பங்கு வகிக்கலாயிற்று .


வங்கமொழியும் சமஸ்கிருதமும் கலந்த மணிபிரளாவ நடையில் எழுதப்பட்டது இப்பாடல் . உண்மையில்வந்தே மாதரம்அல்லபந்தே மாதரம்தான் .ஏனெனில் வங்க மொழியில்என்ற உச்சரிப்பு கிடையாது . ‘தான் உண்டு .பங்க மொழிதான் .பந்தே மாதரம்தான் . எனினும் பிற மொழிகளில் அதுஉச்சரிப்போடு தொடர்கிறது .


இப்பாடல் தேசத்தை பெண் தெய்வமாக உருவகிப்பதால்அல்லாவுக்கு இணையாக இன்னொரு தெய்வத்தை முன்வைப்பதில்லை என்கிற இஸ்லாமியஒரிரறைக்கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக்கூறி முஸ்லீம்கள் பாட மறுத்தனர் . மேலும் பங்கிம் சந்திரர் நாவல் இஸ்லாமிய எதிர்ப்பை உமிழ்ந்ததாலும் இப்பாடல் எதிர்ப்பைச் சந்தித்தது .


முஸ்லீம்களின் அதிருப்தியைக் களையஅல்லா ஹூம் அக்பர்முழக்கமும்வந்தே மாதரம் , முழக்கத்துடன் சேர்ந்தே காங்கிரஸ் மேடைகளில் முழக்கப்பட்டது . ஆயினும் இருதரப்பும் சமாதானம் ஆகவில்லை. நெருடல் தொடரவே செய்தது .


இச்சூழலில் மகாத்மாவும் அவரது பஜனைகளில்ரகுபதி ராகவராஜாராம்…” பாடலையே இசைத்தார் . எனினும்வந்தே மாதரம்எனும் சொல் விடுதலைப் போரில் காந்த ஈர்ப்பு கொண்டதாக மாறியது . அத்துடன் ,விடுதலைப் போரில் பகத்சிங்கின்இன்குலாப் ஜிந்தாபாத்முழக்கமும் , அம்பேத்கரின்ஜெய்பீம்முழக்கமும் கலந்தே ஒலித்தன என்பதுதான் வரலாறு .


ஆனந்த மடம்நாவல் முன்வைத்த கருத்தை தாகூர் ஏற்கவில்லை . மறுதலித்தார்.1916 இல்வீடும் உலகமும்’ "The Home and the World" , எனும் நாவலை 1916 இல் படைத்தார் இரவீந்திரநாத் தாகூர் .அதன் வங்கத் தலைப்பு கோரே பைரே [ Ghôre Baire ] என்பதாகும் .இந்நாவலின் மைய கதாபாத்திரமான நிகில் மற்றும் விமலா இருவரும் மதங்களை மீறிய மனித ஒற்றுமையை அன்றைய தேசபக்த முற்போக்கு அரசியலைப் பேசினார்கள் .


வந்தே மாதரம் பாடலை பாரதியார் இருமுறை தமிழாக்கம் செய்தார் . “ இனிய நீர் பெருக்கினை” , என தொடங்கும் பாடல் முதல் மொழியாக்கம் . “ நளிர் மணி நீரும் நயம்படும் கனிகளும்பின்னர் மொழிபெயர்க்கப்பட்டது . ரகுமான் கான் அண்மையில் இசை அமைத்த பாடலையே இன்றைய இளைஞர்கள் அறிவார்கள் .


இந்த இடத்தில் பாரதியார் பாடல்களில் இடம் பெற்றசிவாஜி தன் சைதன்யத்திற்கு உரைத்ததுஎன்ற பாடலையும் நினைவுகூரலாம் . இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிடும் பாடலே அது .திலகர் தம்கேசரிஇதழில் வெளியிட்டதை மொழியாக்கம் செய்து வெளியிட்டார் பாரதி . அப்போதும் சில வரிகளை தவிர்த்துவிட்டதாகக் கூறியதோடு தாம் இந்து முஸ்லீம் சகோதர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கருதுவதாக குறிப்பும் எழுதினார் . இருந்த போதிலும் அதில் அந்த வெறுப்பு நெருப்பு இருக்கத்தான் செய்தது .


இந்திய விடுதலைக்குப் பிறகு ,அரசியல் சட்டம் வகுக்கும் அவையில்எது தேசிய கீதம்என்கிற விவாதம் முன்னுக்கு வந்தது . வந்தே மாதரம் பாடலின் வரலாற்றுப் பின்னணியில் அது ஏற்கப்படாமல் இரவீந்திரந்தாத் தாகூரின்ஜனகண மன…” தேசிய கீதமாக [national anthem ]ஏற்கப்பட்டது . வந்தே மாதரம் பாடல் ஆதரவாளர்களை சமாதானம் செய்யவந்தே மாதரம்பாடல் [national song ] தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது. தேசிய கீதம் இசைப்பது கட்டாயமாக்கப்பட்டது .


சங் பரிவாரும் மோடி சர்க்காரும் இன்றைக்கு இப்பாடலைக் கொண்டாடும் உள்நோக்கம் அறிய முடியாத ஒன்றா என்ன ?


மீண்டு அந்த இரண்டு சாவால்களையும் நினைவூட்டுகிறோம்.


0 comments :

Post a Comment