இரைச்சலின்
நடுவே
இருக்கப்
பழகுகிறோம்
புழுக்கத்தின்
நடுவே
உழைக்கப்
பழகுகிறோம்
நாற்றத்தின்
நடுவே
நடக்கப் பழகுகிறோம்
வெள்ளத்தின்
நடுவே
பிழைக்கப்
பழகுகிறோம்
வெறுப்பின்
நடுவே
வசிக்கப்
பழகுகிறோம்
சாக்கடைக்
கல்லாய்
கிடக்கப்
பழகுகிறோம்
மறந்தும்
மனிதராய்
வாழ நினையோம்
!
ச்சீ ..ச்சீ
! இழிநிலை !
சீறி எழு
! எரிமலை நீ !
சுபொஅ.
0 comments :
Post a Comment