நான் நான்
நான் என்கிற சுயநலத்தைவிட நாம் , நாங்கள் என்கிற
பொதுநலம் மேலானது அல்லவா ?
“இல்லை”என்றோ “ஆம்” என்றோ பதில் சொல்லுவதிலும் சிக்கல்
உண்டு .
அவர் “நாம்” என யாரைச் சொல்லுகிறார் ? “ நாங்கள்” என யாரை
அடையாளப் படுத்துகிறார் ?
“நாம்” “நாங்கள்” என்பது சாதியைக் குறிக்கவா ? மதத்தைக்
குறிக்கவா ?
கேள்விக்கும்
பதிலுக்கும்கூட வர்க்க சாயம் , வர்ண சாயம் உண்டுதானே !
பேசுகிறவர்
,பேசுகிற காலம் ,பேசுகிற இடம் பேசுகிற நோக்கம்
இப்படி எழும்
எல்லா கேள்விக்கும்
விடை தேடின் . பொருள் துலங்கும்
சுபொஅ.
0 comments :
Post a Comment