மானுடம் சாகவில்லை…
மானுடம் சாகாது
! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம்
சாகாது !
மதவெறியால் குதறப்படும்
இனவெறியால் காயப்படும்
குறுகிய அரசியலால்
மிரட்டப்படும்
கொடுங்கோலரால்
கழுத்து நெரிக்கப்படும்
ஆனாலும்,
மானுடம் சாகாது
! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம்
சாகாது !
கேரளம் உயிர் சாட்சி
மானுடத்தின் மனச்சாட்சி
குறுமதியாளர் வஞ்சகம்
வீழ்த்தி
மானுடம் எழுந்ததின்
பெருங்காட்சி !
மீட்புப் படையாய்
மீனவர் தோழமை
முகம் தெரியாதோரும்
உதவும் கரமாய்
நாடெங்கிலும் ஊற்றெடுத்த
மனிதக் கருணை
சதிவலை கிழித்தது
மானுட மேன்மை !!!
மானுடம் சாகாது
! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம்
சாகாது !
0 comments :
Post a Comment