என்னை உண் ! உன்
விழிகளால்
பச்சை வயல் ஏன்
என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது ?
வளைந்த தென்னைமரம்
ஏன்
என்னைப் பார்த்து
கண்ணடிக்கிறது ?
குளமும் ஏரியும்
ஓடையும் ஏன்
தாளங்கொட்டி என்னை
அழைக்கிறது ?
மலையும் குன்றும்
ஏன்
வழிமறித்து கூப்பிடுகிறது
?
கொஞ்சம் காது கொடுத்தேன்
ஒரேகுரலில்
ஒவ்வொன்றும் என்னோடு
பேசியது
கடைசியாக என்னைப்
பார்த்துகொள்
இனியொரு வாய்ப்பில்லை
!
ஓவியமாய்த் தீட்டிக்கொள்
!
நிழல்படமாய் கிளிக்கிக்
கொள் !
கவிதையில் அழகு
செய் !
கதையில் வர்ணித்துமுடி
!
வளர்ச்சி சுடுகாட்டில்
இனி எமக்கு இடமில்லை
!
எட்டும் வழியெல்லாம்
விரைந்து
என்னை உண் ! உன்
விழிகளால்
சு.பொ.அகத்தியலிங்கம்
.
0 comments :
Post a Comment