அகநெருப்பு

Posted by அகத்தீ Labels:






அகநெருப்பு
சம்பவங்கள்
தனித்தனியாகத்தான் நிகழ்கின்றன
ஆனால்
ஊடும்பாவுமாய் ஒழிந்திருக்கிறது
அதே வன்மம்.


எத்தனை முறைக் கண்டித்துவிட்டோம்!
எவ்வளவு கண்ணீர் சிந்திவிட்டோம்!
இனியும் சிந்தக் கண்ணீரும் இல்லை;
கண்டிக்க வார்த்தைகளும் இல்லை !!


குற்றவாளி யார்?
அவரா அல்லது இவரா?
பிரச்சனையே இல்லை !


உடனடிக்காரணம் எது ?
அதுவா அல்லது இதுவா ?
கேள்வியே இல்லை !


நீங்களும் நானும்கூட குற்றவாளிகளே
ஆம்.! குற்றத்தில் நமக்கும் பங்கு உண்டு !!


என்ன யோசிக்கிறீர்கள் ?


மதபோதையில்
மனச்சாட்சியைத் தொலைப்பதற்கு எதிராய்....


சாதிவெறியில்
சகமனிதரை வெறுப்பதற்கு எதிராய் ...


உதிரத்தில் கலந்த ஆணாதிக்க வெறியில்
சகமனுஷியை சிதைப்பதற்கு எதிராய்...


நீ என்ன செய்தாய் ?
சொல்.... சொல்.... சொல்....


இனியேனும்
செய்... செய்.... செய்....

0 comments :

Post a Comment