அவ்வளவேதான்
!!!
நேற்றிருந்தார்
இன்றில்லை
அழுகிறார்
சிலர்
ஆறுதல்
மொழிகிறார் சிலர்
போற்றுகிறார்
சிலர்
தூற்றுகிறார்
சிலர்
விட்டபணி
தொடர்வோம்
என்கிறார்
சிலர்
நினைவை
சுமப்போம்
என்கிறார்
சிலர்
ஆத்மா
சாந்திஅடைக
என்கிறார்
சிலர்
அஅஞ்சலிக்
கூட்டத்தில்
எத்தனை
வாக்குறுதிகள்
எத்தனை
சங்கல்பங்கள்
அப்புறம்
அனைத்தும்
மறந்தே
போகிறோம்!
இறந்தவரும்
அனுபவம் உண்டு
இறக்கப்போகிறவருக்கும்
இதேதான்
இறந்தபின்
எதுவுமில்லை
இருக்கையில்
நெஞ்சம் உரைத்ததை
நேர்மையாய்
செய்துமுடிப்போம் !
வாழ்க்கைக்கு
ஓர் இலக்கு இருக்கட்டும்
கழுதைக்கு
முன் கட்டிய காரட்டாய்
களைப்பின்றி
ஓடிவிழுவோம் !
சாவு
நம்கையில் இல்லை
வாழ்வை
இயன்றவரை நமதாக்குவோம்!
சமூகத்துக்காக
தினையளவேனு
செய்யாத
வாழ்க்கைதான் வீணென்போம்
அவ்வளவுதான்.
அவ்வளவேதான்
!!!
- சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment