பொதுவுடைமை வளர்த்த தமிழ்

Posted by அகத்தீ Labels:


மயிலை பாலு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அரசு, தனியார் என்ற பாகுபாடில்லாமல் ஊடகங்களும் சேர்ந் திசைக்கின்றன.கண்காட்சிகள், கலை நிகழ் வுகள், சொற்பொழிவுகள்,ஆய்வரங்குகள் என மாநாட்டின் நிகழ்வுகள் பற்றி அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாநாட் டையொட்டி என்னென்ன புத்தகங்கள் வெளி யாகின்றன என்ற அரசு அறிவிப்பினைக் காண முடியவில்லை. என்றாலும் நம்பிக்கை யளிக்கும் விதமாக என்சிபிஎச், பாரதி புத்தகா லயம் போன்ற நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுகின்றன.
என்சிபிஎச் வெளியீடுகளில் ஒன்றாக பொதுவுடைமை வளர்த்த தமிழ் என்ற நூல் வெளிவருவது குறிப்பிட்டுச் சொல்லவேண் டிய ஒன்றாகும். பண்டையத் தமிழ் நூல்கள் தொடங்கி இன்று வரை இலக்கியக் களத்தை மார்க்சியப் பார்வையிலான ஆய்வுகள், படைப் புகள், முயற்சிகள் பற்றி எடுத்துரைப்பதாக இந்நூல் விளங்குகிறது.
ஒரு மொழியின் வளர்ச்சியையும் செழு மையையும் கணிக்க வேண்டுமானால் அம் மொழியில் உள்ள பண்டைய நூல்களின் செழுமையைக் கொண்டு மட்டும் நிர்ணயித்து விட முடியாது. சமுதாயத்தில் வளர்ச்சி ஏற்ப டும் பொழுது அந்தச் சமுதாயத்திலுள்ள பல் வேறு கருத்துகளை- அரசியல், பொருளா தாரம், விஞ்ஞானம், கணிதம், சமூகவியல், சட் டம் என அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு அந்த மொழி எந்த அளவு பயன்படுகிறது என்பதைக் கொண்டே அதன் வளர்ச்சியை நிர்ணயிக்க முடியும்
இந்தப் பணியை துறை தோறும் தொடங்கி வைத்தவர்கள் பொதுவுடைமை சிந்தனையா ளர்களாகவே உள்ளனர். காதல் பேசும் அகத் தையும், வீரம் பேசும் புறத்தையும், கற்பு பேசும் சிலம்பையும், இன்னபிற இலக்கியங்களையும் வியாக்கியானம் செய்து கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்துக்குள் அறிவியல் பார்வை யைக் கொண்டு வந்தவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இது நடந்தது 75 ஆண்டுகளுக்கு முன் என்பதைப் பொதுவுடைமை வளர்த்த தமிழ் என்ற இந்நூல் பதிவு செய்கிறது. 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினத்தன்று சிங்காரவேலரை மையமாகக் கொண்டு புதிய உலகம் இதழ் தொடங்கப் பட்டது. யீரசந ளஉநைஉந என்று வழங்கும் சுத்தமெய்ஞ் ஞானத்தை எடுத்துரைக்கத் தமிழில் ஒரு தனித்த பத்திரிகையும் கூட இல்லை. இந்த அவசியத்தைப் பூர்த்திசெய்ய புதிய உலகம் (புது உலகம்)என்ற பத்திரிகை வெளிவந்ததாக அந்த இதழின் தலையங்கம் கூறுகிறது.
இதேபோல் அரசியல், பொருளாதாரத் துறையில் தமிழுக்குப் புதிய வரவு வைத்த வரும் சிங்கார வேலர் தான். கம்யூனிட் அறிக்கையின் மொழியாக்கம் சமதர்ம அறிக் கை என்ற பெயரில் 1933 ஆம் ஆண்டி லேயே குடி அரசு இதழில் தொடராக வெளிவந் தது என்றால், பொதுவுடைமைவாதிகளின் புதுமை தாகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக் கலை சம்பந்தமாகவும் பொதுவுடைமை சம் பந்தமாகவும் அதிகம் படித்துப் புரிந்துகொண்டு அந்த அறிவை மற்றவர்களுக்குப் புரியும் படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன்வரிசையில் முதலிடம் அவருக்கே அளித்திட வேண்டும் என்று சிங்காரவேலர் பற்றி அண்ணா மதிப்பீடு செய்கிறார்.
சிங்காரவேலரின் பாரம்பரியம் தொடரப் பட்டிருந்தால் இன்று அனைத்து துறைகளி லும் தமிழின் கொடி ஓங்கிப் பறந்திருக்கும். ஆங்கிலத்திற்கு அடிமைப் பட்டிருக்க வேண் டாமே என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த நூல்.
தமிழ் என்றால் இலக்கியங்கள் மட்டுமா? ஆதிகாலத்திலேயே முத்தமிழ் என பகுக்கப் பட்டிருந்தது என்றால், இன்று எத்தனை எத்தனை தமிழ்கள் இணைந்திருக்கின்றன! அரசியல், பொருளாதாரம், வணிகம், அடிப் படை அறிவியல், ஊடகம், கணினி, நீதித் துறை, நிர்வாகத் துறை, பொறியியல், மருத்து வம், நாட்டுப்புறவியல் என இது விரிந்து கொண்டே செல்கிறது.
இவற்றிலெல்லாம் பொதுவுடைமை சிந்த னையாளர்கள் எப்படியெல்லாம் ஈடுபட்டு, தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கிறார் கள் என்ற தகவல்களை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது இந்நூல்.
காலவரிசைப்படியான தனிநபர்கள், படைப்புகள் என்ற புள்ளி விவரத்தை அள் ளித் தந்து சலிப்பு ஏற்படுத்திவிடாமலும், ஆய்வு செய்து வழங்குவதாகக் கூறி ஆழத் துக்குள் சென்று வாசகர்களை மூச்சுத் திண றச்செய்து விடாமலும், பசித்த வயிற்றுக்கு உணவுபரிமாறும் பக்குவத்தோடு இந்த நூலினைத் தந்திருக்கிறார் சு.பொ. அகத்திய லிங்கம்.
அறிவியல் தமிழ் என்றால் புத்தகங்க ளோடு நின்றுவிடாமல் களப்பணியாற்றிய அறிவியல் இயக்கம் வரையிலும், இசைத் தமிழ் என்றால் சேர்ந்திசைவரையிலும், நாட கத் தமிழ் என்றால் வீதி நாடகம் வரையிலும் பொதுவுடைமைவாதிகளின் பங்களிப்பு என்ன என்பதை குறையும் மிகையுமின்றி அளவாகக் கூறிச் செல்கிறார்.
பொதுவுடைமை இயக்கங்கள் என்றால் இரு கம்யூனிட் கட்சிகளோடு நின்று கொள்ளாமல், மார்க்சிட்-லெனினிட் அமைப்புகள் பல துறைகளிலும் தமிழ் வளர்ச் சிக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கின்றன என் பதையும் காய்தல் உவத்தலின்றி ஆய்வு செய் திருக்கிறார் நூலாசிரியர்.
தமிழ் வளர்த்தல் என்றால் புத்தகங்கள் எழுதுவது, ஆய்வு செய்வது மட்டும் அல்ல. தமிழில் பணவிடை அனுப்பவும், தந்தி அனுப் பவும் வகைசெய்ய வேண்டும் என்று போராடு வதும் அதில் வெற்றி பெற்றிருப்பதும் கூட தமிழ் வளர்ச்சியின் பகுதிதான் என்ற நூலாசி ரியரின் வாதம் புதுமையானது; பொருத்தமா னது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பேசி யவர்கள் விட்டுவிட்ட இடத்தை பொதுவுடை மை இயக்கத்தின் மூத்தத் தலைவர் ஏ. நல்ல சிவன் நிரப்பியிருக்கிறார். காங்கிர இயக்கத் தின் தலைவர் குமரி அனந்தனின் பெயரும் விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று பாரதி கட்டளையிட்டான். கம்யூ னிட்டுகள் செயல்படுத்தினர். இதுதான் வரலாறு என்று தாம் எழுதியிருப்பதற்கு நூல் முழுவதும் நியாயம் செய்திருக்கிறார் நூலா சிரியர். மேலை நாட்டின் புதுப்புது துறைகளைச் சார்ந்த நூல்களோடு அருஞ்சொற்களையும் தமிழுக்கு ஏராளமாகத் தந்தவர்கள் பொது வுடைமைவாதிகள்.
மேட்டுக்குடி இலக்கியங்கள் மட்டுமே போற்றிப் புகழப்பட்டுக் கொண்டிருந்த காலத் தில், அடித்தள மக்களின் வாய்மொழி இலக் கியங்களை அச்சேற்றி அத்துறையில் புதுத் தடம் பதித்தவர் பேராசிரியர் நா. வானமாமலை.
தமிழ் வாழ்க என்றாலும், சாதி, சமயம் சார்ந்து பாரதியும் கம்பராமாயணமும் திராவிட இயக்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டன. தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளு வதே சரியான பார்வையாக இருக்கும் என்ற வகையில் பாரதியையும் கம்பனையும் முன்னி றுத்தி, மக்களிடம் தமிழ் உணர்வையும் சுதந் திர உணர்வையும் ஊட்டியவர் தோழர் ஜீவா என்பதையும் உரிய முறையில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள். ஆங் கிலம் போகாமல் சப்பணம் போட்டு குந்தியி ருக்கிறது.இதுவும் போதாதென்று புதிய உலகமயச் சூழலில் அதற்கு ஆணி அடித்து இருத்தும் முயற்சியும் நடக்கிறது. இந்தியின் ஆதிக்கத்தை முறியடித்துவிட்டதாக நெஞ்சு யர்த்திக் கொள்வாரின் வாரிசு கூட நாடாளு மன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை ஓராண்டு காலமாக நீடிக்கிறது. அவரது கட்சி சார்பு வேறு; ஆனால் இந்த விஷயத்தில் கூட நாடாளுமன்றத்தில் அமைச்சர் மு.க அழகிரி தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் பிரகாஷ் காரத் வலியுறுத்துவதும் தமிழ் வளர்ச்சியின் ஒரு பகுதி தானே என்ற வாதமும் இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமை வளர்த்த தமிழ் என்பதை பொதுவுடைமை சிந்தனை கொண்டோர் வளர்த்த தமிழ் என்று ஆகு பெயராக கொள்ள வேண்டும்.
இந்த நூல் நுட்பமான பல தகவல்களைக் கொண்டுள்ளது. தமிழ் வளர்த்த பொதுவுடை மையாளர்களைத் தட்டிக் கொடுத்து பாராட்டத் தவறவில்லை. அதே சமயம் அணிந்துரை தந் துள்ள ச.தமிழ்ச்செல்வன் கூறுவது போல மார்க்சிய இயக்கத் தலைவர்களில் ஒருவர் என்ற போதும் சுயவிமர்சனமாக சில பகுதி களில் அன்றைய பொதுவுடைமை இயக்கத் தின் பார்வைகளை சுட்டிக் காட்டி ஒரு வித மாக அறிவுலகம் சார்ந்த நேர்மையை இந்நூல் நெடுகிலும் கடைப்பிடித்துள்ளார்.
தோழர் அகத்தியலிங்கம் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் மார்க்சியத்துக்குள் அடியெ டுத்துவைத்தவர். அந்த உணர்வு குன்றாமல் தொடர்ந்து மார்க்சியத்தையும் மனித நேயத் தையும் பேணிவருபவர். தமிழையும் மார்க் சியத்தையும் இரு கண்களாக நேசிப்பவர். அந்த வெளிப்பாட்டின் அருமையான வடிவ மாக இந்த நூல் அமைந்திருக்கிறது என்ற மூத்த எழுத்தாளர் பொன்னீலனின் கருத்து ரையே இதன் சிறப்பை வெளிப்படுத்தும்.
புதிய சிந்தனைக் கருவூலங்களைத் தமி ழுக்குக் கொண்டுவருவதும் அவற்றை அனைத்துப் பகுதி தமிழ் மக்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதுமே மெய்யான தமிழ்த் தொண்டின் முதல்படியாகும். இதனை நன்கு அறிந்த கம்யூனிடுகள் ஆரம்பம் முதலே அத்தகு பணியில் தங்களை ஈடுபடுத் திக் கொண்டிருக்கிறார்கள்.
என்பதற்கான பல ஆதாரங் களைத் தரும் இந்நூல், ஒரு முன்மொழிவு தான் என்று ஆசிரியரே கூறுகிறார். முன் மொழிவே முதன்மையான மொழிவாகவும் இருப்பதை நூல் வாசிப்போர் உணர முடியும்.
வளர்க தமிழ் வாழ்க தமிழ் என்பீர் கூடி
வழுத்துவதால் தமிழ் வளர வசிட்டரா நீர்?
தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்ததில்லை
தானாக எம்மொழியும் வளர்ந்ததில்லை
செம்மொழித் தமிழுக்கும் இது பொருந்தும். நமது மொழிவளர்ச்சிக்கு பொதுவுடைமையா ளர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தின் மீது வலுவான கோட்டை கட்டி, அன்னைத் தமிழுக்கு அரியணை அளிக்கவும் செம் மொழித் தமிழை மேலும் கணினியுகத்திற் கேற்ப சிறப்பிக்கவும் இந்நூல் வழிகாட்டும். இதனை வாங்குவதும் வாசிப்பதும் தமிழ் வளர்த்ததில் பொதுவுடைமையின் பங்கினை ஓங்கி ஒலிப்பதும் காலத்தின் தேவையாகும்.
பொதுவுடைமை வளர்த்த தமிழ் சு.பொ. அகத்தியலிங்கம் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவு (பி) லிட்.41-பி சிட்கோ இன்டடிரியல் எடேட், அம் பத்தூர் சென்னை-6 00098. பக்.150 ரூ.70/-

1 comments :

  1. vimalavidya

    The review instigate the readers to read the book.The book and the author Analise unbiased the contribution of leftists towards the growth of Tamil.

Post a Comment